நாக்பூரில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாசிடிவ்.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 7ஆக உயர்வு..!!
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு பதிவாகி, இந்தியாவிற்குள் வைரஸ் நுழைந்துள்ளது மக்களை பீதி அடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி-HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. HMPV வைரஸ் என்பது கொரோனா போலவே, மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இந்த வைரஸ் குறிப்பாக, 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக தாக்குகிறது.
இந்நிலையில் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்நாடக மாநிலமான பெங்களுருவில் 8 மாதக் குழந்தைக்கும், 3 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதனை ICMR உறுதிப்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3வது HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தைக்கு மூச்சுக்குழாய் நிமோனியா பாதிப்பு காரணமாக HMPV பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சென்னையில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் HMPV வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் நாக்பூரில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் HMPV பாதிப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
Read more ; Breaking | பேரதிர்ச்சி.. சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு..!! மீண்டும் ஊரடங்கா..?