ஆம்ஸ்ட்ராங் கொலை..!! காவல்துறைக்கு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்..!!
சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பல ஆண்டுகளாக இருக்கும் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார். தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ரங்கை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Read More : பழிக்கு பழி..!! ஆம்ஸ்ட்ராங் கொலையின் அதிரவைக்கும் பின்னணி..!! போலீசார் கூறும் அதிர்ச்சி தகவல்..!!