மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பண மழை கொட்டப் போகுது..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மெகா பிளான்..!!
தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 4.73 லட்சம் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்க திமுக அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்த 3 வருட ஆட்சியில், 90 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறதாம். தற்போது மேலும், 90 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இதற்கான பொறுப்பு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவியும் வழங்க உள்ளார். இதற்கு 3 விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற இப்போதே முனைப்பு காட்ட துவங்கியிருக்கிறது. வழக்கமாக அதிமுகவுக்கு பெண்கள் ஓட்டு அதிகமாக இருக்கும். இதனை உடைக்க திமுக களமிறங்கி உள்ளது.
மற்றொரு காரணம் கடந்த 2009-ம் ஆண்டு துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது மகளிர் சுயஉதவிக்குழுக்கள் திட்டத்தைத்தான் கையில் எடுத்திருந்தார். மாவட்டம் வாரியாக, சுற்றுப்பயணம் சென்று பலமணி நேரம் ஒவ்வொரு சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி வந்தார். இது அப்போதைய திமுக அரசுக்கு மிகுந்த பலத்தை தந்ததுடன், ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெற்றியையும் ஏற்படுத்தி கொடுத்தது.
அதே பாணியில், தற்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின், சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், ஆயுத பூஜைக்கு பிறகு, உதயநிதி ஒவ்வொரு மாவட்டமாக சென்று வரும் வகையில், பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மற்றொரு முக்கிய காரணம் விஜய் புதுக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், திமுகவின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ளவும், பெண்கள் வாக்குகளை அதிகளவில் பெறுவதற்கும் இந்த கடனுதவி வியூகம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
Read More : உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! கனமழை கொட்டித் தீர்க்கப் போகுது..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!