ஆம்ஸ்ட்ராங் கொலை..!! மூளையாக இருந்த பாஜக நிர்வாகி..!! யார் இந்த அஞ்சலை..?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய தொடர்பு இருப்பதாக பாஜக மகளிர் அணி நிர்வாகி அஞ்சலையை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மற்றொரு நிர்வாகியான செல்வராஜையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 11 பேரையும் போலீஸ் காவலில் விசாரித்த நிலையில், திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் போலீஸ் காவல் முடிந்து 10 பேரை நேற்று பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்த நிலையில், இந்த சம்பவத்தில் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலையை காவல்துறையினர் தேடிவருகின்றனர். சென்னை பாஜக மகளிர் அணி துணை செயலாளர் அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகியான அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததோடு, உளவு பார்க்கும் வேலையிலும் அஞ்சலை ஈடுபட்டுள்ளார். இந்த தொடர்பின் அடிப்படையில் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
Read More : இப்படி ஒரு விநோத கிராமமா..? எப்படித்தான் மக்கள் வாழ்கிறார்கள்..? சுவாரஸ்ய தகவல்..!!