ஆம்ஸ்ட்ராங் வழக்கு..!! கொலையாளிகளை ஒருங்கிணைத்தது எப்படி..? அரசியல் பின்புலம் இருக்கிறதா..? அஸ்வத்தாமனிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!!
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனிடம் துருவித்துருவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல தாதா வியாசர்பாடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் மோதல் ஏற்பட்டதா? தொழில் நிறுவனங்களில் இருந்து மாதந்தோறும் மாமூல் வசூலிப்பதற்கு ஆம்ஸ்ட்ராங் இடையூறாக இருந்தாரா? எத்தனை வருடங்களாக ஆம்ஸ்ட்ராங் தரப்பு உடன் முன்விரோதம் இருந்தது? நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மை தானா? என கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதகா கூறப்படுகிறது.
மேலும், கொலையாளிகளை ஒருங்கிணைத்தது எப்படி? அவர்களுக்கு யார் மூலமாக பணம் வழங்கப்பட்டது? கொலையில் அரசியல் பின்புலம் இருக்கிறதா? உள்ளிட்ட கேள்விகளை கேட்டு அஸ்வத்தாமன் அளிக்கும் பதிலை தனிப்படை போலீசார் வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.
Read More : முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்குப்பதிவு..!! என்ன காரணம்..? பெரும் பரபரப்பு..!!