பயங்கரம்.. மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகள்..!! குழந்தைகளையும் சும்மா விடல.. என்ன நடந்துச்சு?
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பீடி காலனியை சேர்ந்தவர் சிராஜ். இவர் அப்பகுதியில் கவரிங் கடை நடத்தி வரும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆயிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. அயிஷாவிற்கும் அவரது மாமியார் சம்சத் பேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் மோதல் அதிகரிக்கவே, மாமியார் சம்சத் பேகம் இரவில் தூங்கி கொண்டிருக்கும் போது, தலையணையால் சம்சத் பேகத்தின் முகத்தை அமுக்கியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்யும் முயன்றதாக சொல்லப்படுகிறது. மனநல பாதிப்பு காரணமாக ஆயிஷா அவ்வாறு நடந்திருக்கலாம் என நினைத்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்திருக்கின்றனர்.
சில நாட்களில் ஆயிஷாவின் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பவே, மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் மீண்டும் ஆயிஷா ஆக்ரோஷமாக நடந்திருக்கிறார். இதனால் குடும்பத்தினர் ஆயிஷாவை ஒடுகம்பட்டியில் இருக்கும் தர்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் பயந்திருப்பதாக கூறி மந்திரிக்கப்பட்ட கருப்பு கயிறு ஒன்றை அவரது கையில் கட்டி வீட்டுக்கு கூட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில், என்னை பைத்தியம் என நினைத்தீர்களா ஒழுங்காக என் கையில் இருக்கும் கயிற்றை அவுத்து விடுங்கள் என மாமியாரிடம் சண்டை போட்டுள்ளார் ஆயிஷா. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஆயிஷா வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மாமியார் சம்சத் பேகத்தின் மார்பு, இடுப்பு மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்சத் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். கொலை செய்த கத்தியுடன் ரத்த வெள்ளத்தில் அருகிலேயே ஆயிஷா அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தோர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது சம்சத் இறந்து கிடக்க குழந்தையும் காயத்துடன் இருந்ததையும், ரத்த வெள்ளத்திற்கு நடுவே ஆயிஷா அமர்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஆயிஷாவை சமாதானப்படுத்தி குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததை அடுத்து, ஆயிஷா மயங்கி விழுவது போல அவர் படுத்துக்கொண்டார். தொடர்ந்து அவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஏற்கனவே சொத்து பிரச்சனை காரணமாக மாமியார் மருமகள் இடையே பிரச்சனை இருந்து வந்ததாகவும் அதன் காரணமாகவே கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிஷா உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தவர் தானா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more ; நவம்பர் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை…! வானிலை மையம் தகவல்…!