For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா..? உடல் எடை சீக்கிரமாக கூட நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்..!!

Red meat is considered one of the best foods for building muscle.
11:43 AM Dec 18, 2024 IST | Chella
ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா    உடல் எடை சீக்கிரமாக கூட நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்
Advertisement

ஒல்லியான உடல் தோற்றம் உடையவர்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிக்கலாம். உடல் எடையை அதிகரிக்க, அதிக கலோரிகளை தொடர்ந்து சாப்பிடுவது மிக முக்கியம். எடை அதிகரிப்பது அல்லது உங்கள் உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையை குறைப்பது போல எளிதானது அல்ல.

Advertisement

இருப்பினும், உங்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்வதால், ஆரோக்கியமான முறையில் உங்கள் எடையை அதிகரிக்கலாம். உடல் எடையை அதிகரிக்க அல்லது ஆரோக்கியமாக தசையை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவு வகைகளை தற்போது பார்க்கலாம்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் ஸ்மூத்திகளை குடிப்பது, உடல் எடையை திறம்பட அதிகரிக்கும். சுமார் 1/4 கப் பாதாமில் 170 கலோரிகள், 6 கிராம் புரதம், 4 கிராம் ஃபைபர் மற்றும் 15 கிராம் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. உங்கள் எடை அதிகரிக்க உதவுவதில் நட்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிவப்பு இறைச்சி தசையை வளர்க்கும் சிறந்த உணவு பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிவப்பு இறைச்சியில் உள்ள அமினோ அமிலம் தசை புரதத் தொகுப்பைத் தூண்ட உதவுகிறது.

உருளைக்கிழங்கு மற்றும் பிற மாவுச்சத்துள்ள உணவுகள் அதிக கலோரிகளை தருகின்றன. தினமும் ஆரோக்கியமான மாவுச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வது ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். முழு கொழுப்புள்ள கிரேக்க தயிர் மற்றும் பாலை உட்கொள்வதை விட சிறந்தது எதுவுமில்லை. தயிர் மற்றும் பால் ஒரு சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகின்றன.

Read More : மாதம் ரூ.60,000 சம்பளம்..!! 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement