”உங்கள் ஃபோன் எந்தளவுக்கு வேகமாக சார்ஜ் ஏறுகிறதோ அந்தளவுக்கு ஆபத்து”..!! நிபுணர்கள் எச்சரிக்கை..!!
ஸ்மார்ட் ஃபோன் பேட்டரியில் எத்தனை சதவீதம் சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய நவீன காலத்திற்கேற்ப அனைவரிடமும் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகமாகிவிட்டன. ஒரு வீட்டிற்கு ஒரு போன் இருந்த காலம் மறைந்து தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் தனித்தனி செல்போன் பயன்பாடு என்றாகிவிட்டது. இந்நிலையில், தொலைபேசியை இயக்க பேட்டரி மிக முக்கியமான அங்கமாகும்.
இதில் சிறப்பு கவனம் தேவைப்படுவது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. ஃபோன் பேட்டரியில் எத்தனை சதவீதம் சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த தகவலை தற்போது பார்க்கலாம். ஃபோன் 100% சார்ஜ் ஆக வேண்டும் என்பதே பெரும்பாலானோர் விரும்புவது. அதனால்தான் போனை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து கொண்டே இருக்கிறார்கள். மேலும் சிலர் பேட்டரி 15 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்போது போன் சார்ஜிங் பயன்படுத்துகின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, தொலைபேசியின் பேட்டரி, சார்ஜ் செய்வதற்கு முன்பு முற்றிலும் தீர்ந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நவீன லித்தியம் அயன் பேட்டரிகள் சேதமடையலாம். ஃபோனின் பேட்டரியை நன்றாக வைத்திருக்க, போனை 20 சதவீதம் வரை சார்ஜ் செய்து, பிறகு 80-90 சதவீதம் வரை சார்ஜ் செய்வதே சிறந்தது.
நீங்கள் வேகமாக சார்ஜ் ஆகும் சார்ஜர்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மிகவும் கவனம் தேவை. ஏனென்றால், 0%-ல் இருந்து சார்ஜ் செய்வது அதிக வெப்பத்தை உருவாக்கும். அதோடு வேகமாக சார்ஜ் ஆகும் திறன் 80% குறையும் என்று தெரிவித்துள்ளனர்.