For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேறு ஒருவர் பெயரில் உள்ள சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களா?… புதிய ரூல்ஸ் போட்ட அரசு!… உடனே இத பண்ணிடுங்க!

07:37 AM Dec 06, 2023 IST | 1newsnationuser3
வேறு ஒருவர் பெயரில் உள்ள சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களா … புதிய ரூல்ஸ் போட்ட அரசு … உடனே இத பண்ணிடுங்க
Advertisement

நாட்டு மக்கள் அனைவரும் சுகாதாரமான எரிவாயு இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து இலவச சிலிண்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதன் தாக்கத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் சிலிண்டர் மானியமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிலிண்டர் வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுளது. இதற்கான பணிகள் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடக்கிறது. சிலிண்டர் இணைப்பில் ஆதார் அங்கீகாரம் செய்யப்படாவிட்டால் எதிர்காலத்தில் சிலிண்டர் இணைப்பு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Advertisement

சிலிண்டர் வாங்கும் மக்கள் சம்பந்தப்பட்ட ஏஜென்சியிடம் சென்று ஆதாருக்கு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக, வாடிக்கையாளர்களுக்கு ஏஜென்சிகள் மூலம் செய்தி வழங்கப்படும். சிலிண்டர் விநியோக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை வழங்கும்போது பயனாளிகளின் அங்கீகாரம் அவசியம். அதற்கு முக ஸ்கேனிங் மற்றும் கைரேகை ஸ்கேனிங் ஒப்புதல் அளிக்கப்படும்.

கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்ட பெரும்பாலான சிலிண்டர் இணைப்புகள் ஆதார் அங்கீகாரம் செய்யப்பட்டவை. ஆனால் அதற்கு முன் மில்லியன் கணக்கான சிலிண்டர் நுகர்வோருக்கு ஆதார் அங்கீகாரம் இல்லை. எனவே அவர்கள் இந்த அப்டேட்டை செய்வது அவசியமாகும். ஒரு வருடமாக சிலிண்டர்களை முன்பதிவு செய்யாத நுகர்வோரின் எண்ணிக்கை கிராமங்களில் அதிகமாக இருக்கிறது.

அதேபோல, இறந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இணைப்பு மாற்றப்படாமல் இருக்கிறது. இது விதிமுறைப்படி தவறாகவும். 2016 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற சூழ்நிலையில் யாரோ ஒருவர் பெயரில் உள்ள எரிவாயு இணைப்பை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே ஆதார் அங்கீகாரம் செய்தால் அது நிலைமையை மேம்படுத்தும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement