ஆப்பு வைக்கும் அலாரம்..!! இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? மக்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
காலையில் அலாரம் வைத்து எழுவது உடலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீங்கள் காலையில் பல அலாரங்களை அடுத்தடுத்து வைத்து எழும் பழக்கம் கொண்டவர் என்றால், அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல என்றும் கவனக்குறைவு, மனநல பாதிப்பு போன்ற பிரச்சனைகளை அது ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சில நிமிடங்கள் கூடுதலாக தூங்கலாம் என்ற எண்ணத்தில் பலமுறை அலாரத்தை ஒத்திவைக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. ஆனால், இந்த பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா..?
நம் உடல் பல்வேறு தூக்க நிலைகளைக் கடந்து செல்கிறது. அதில் REM (Rapid Eye Movement) தூக்கம் என்பது மிக முக்கியமானது. இது அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. ஆனால், பல அலாரங்களை வைப்பதன் மூலம் உங்கள் தூக்க சுழற்சி பாதிக்கப்பட்டு, தூக்கமும் குறைகிறது.
பாதிப்புகள்
* பல முறை எழுந்து மீண்டும் தூங்குவது தூக்கச் சோர்வுக்கு வழிவகுக்கும். இதனால் பகலில் கவனம் குறைதல், மனநிலை பாதிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
* அலாரம் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் உடலில் அழுத்தம் ஏற்பட்டு, கார்டிசோல் அளவு அதிகரிக்கும். நீண்ட கால அழுத்தம் உடல், மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும்.
* தரமான தூக்கத்தையும், ஆரோக்கியமான தூக்க பழக்கத்தையும் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்தலாம்.
Read More : ’விஜய் கொடி ஏற்றிய நேரம் சரியில்லை’..!! ’அந்த விஷயத்தில் சந்தேகம் தான்’..!! பரபரப்பை கிளப்பிய ஜோதிடர்..!!