தூங்கி எழுந்தவுடன் செல்போனில் மூழ்குபவரா நீங்கள்..? உடனே இந்த பழக்கத்தை கைவிடுங்க..!! இல்லைனா என்ன ஆகும் தெரியுமா..?
இன்றைய காலகட்டத்தில் செல்போன் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. உணவுக்கு முன், உணவுக்குப் பின் உணவின் போது, வேலை செய்யும் போது என அனைத்து நேரங்களிலும் செல்போனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் கழிவறைக்கு சென்றால் கூட போன் இல்லாமல் செல்வதில்லை.
பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன், செல்போன் பார்ப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், இந்த பழக்கம் அவர்களின் கண்களுக்கு மோசமான தீங்கினை விளைவிக்கும். இது பல கண் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கும். 80 சதவீத ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் காலையில் எழுந்த 15 நிமிடங்களுக்குள் தங்கள் மொபைல் ஃபோன்களை பார்க்கிறார்கள். இந்த செயல் கண்களை மோசமாக பாதிக்கிறது. எனவே, காலையில் எழுந்தவுடன் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ஐசிடி ஆய்வு தெரிவிக்கிறது.
2007ஆம் ஆண்டு ஜர்னல் ஆப் நியூரல் ட்ரான்ஸ்மிஷன் அறிக்கையின்படி, காலையில் எழுந்தவுடன் மொபைல் ஃபோன்களை பார்ப்பதால் மொபைல் ஃபோனின் ஒளியின் காரணமாக உடலில் மெலடோனின் அளவு அதிகரிக்கிறது. இது உங்கள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் அதிகரிப்பதால், அதிகமாக தூங்க நேரிடும். இதன் விளைவாக உடல் சோர்வாக காணப்படும்.
நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் அல்லது காலையில் தூங்கி எழுந்த பின் மின்சார கேஜெட்டைப் பயன்படுத்தினால், அது உங்கள் உயிரியல் சுழற்சியை சீர்குலைக்கும். இவற்றில் இருந்து வரும் நீல ஒளியை விழித்திரையில் உள்ள ஒலி சேர்க்கை செல்கள் உறிஞ்சிக் கொள்ளும். காலையில் எழுந்தவுடன் மொபைல் போனை பார்க்க ஆரம்பித்தால் உங்களுக்கு அது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கும்.
ஒரே நேரத்தில் பல செய்திகள், மின்னஞ்சல்கள், பல்வேறு வகையான அறிவிப்புகளை பார்ப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மன அழுத்தத்துடன் அந்த நாளை தொடங்கினால் நாள் முழுவதும் மன அழுத்தத்தில் இருக்கும் சூழல் ஏற்படும். மொபைல் போனின் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டு நாளை தொடங்குவது கண்கள் வறண்டு போக வழிவகுக்கும். மேலும், இது பார்வையையும் பாதிக்கிறது. இது கண்களின் மாக்குலர் சிதைவு அபாயத்தையும் அதிகரிக்கிறது.