For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொன்முடி சிறைக்கு செல்வது உறுதியா..? நாளை தெரிந்துவிடும்..? உச்சநீதிமன்றம் விசாரணை..!!

11:59 AM Jan 11, 2024 IST | 1newsnationuser6
பொன்முடி சிறைக்கு செல்வது உறுதியா    நாளை தெரிந்துவிடும்    உச்சநீதிமன்றம் விசாரணை
Advertisement

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.

Advertisement

2006 - 2011ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016இல் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து டிசம்பர் 19ஆம் தேதி தேதி தீர்ப்பளித்தார். டிசம்பர் 21ஆம் தேதி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் 3 ஆண்டுச் சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. உச்சநீதிமன்றம் நாளை பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்குமா? அல்லது சிறை தண்டனையை உறுதி செய்யுமா? அப்படி உறுதி செய்தால் பொன்முடி, மனைவியுடன் சிறைக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

Tags :
Advertisement