மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா..? இதை ஃபாலோ பண்ணி பாருங்க..!! வலி உடனே பறந்து போயிரும்..!!
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மாதவிடாய் சமயத்தில் ஏற்படக்கூடிய வலிகளாலும், தசைபிடிப்புகளாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கருப்பையின் மென் படலங்களை வெளியேற்றும்போது சுருங்குவதன் காரணமாக இந்த தசைபிடிப்புகள் ஏற்படுகின்றன. இவை மிதமான அசௌகர்யம் முதல் கடுமையான வலி வரை கொடுக்கும். இத்தகைய மாதவிடாய் கால தசைபிடிப்புகளை குறைக்க உதவும் 7 வைத்திய முறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஹீட் தெரபி (வெப்ப சிகிச்சை) : அடிவயிற்றுப் பகுதியில் வெப்ப சிகிச்சை கொடுப்பதன் மூலம் கருப்பையின் தசைகள் தளர்வடைந்து தசைபிடிப்புகளின் தீவிரத்தை குறைக்க உதவும். சுடுநீரில் குளிப்பது, சூடான பேடுகள் அல்லது வெந்நீர் நிறைந்த தண்ணீர் பாட்டிலை அடிவயிற்றின் மேல் வைப்பதன் மூலம் உங்களுக்கு இந்த வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
உடற்பயிற்சி : உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து உடலில் உள்ள இயற்கை வலி நிவாரணியான எண்டோர்பின் வெளியேறும். உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் குறைவான வலியே ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூலிகை டீ : இஞ்சி, பெப்பர்மிண்ட், மெமோமில் (சீமை சாமந்தி) போன்ற சில மூலிகை டீ மாதவிடாய் தசைபிடிப்புகளை குறைக்க உதவும். இந்த டீ-க்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் வலியை குறைக்கும் தன்மையும் உள்ளது.
மூச்சுப் பயிற்சிகள் : உடலை தளர்வடையச் செய்யும் மூச்சுப் பயிற்சிகளான தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசம் போன்றவை மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. யோகா பயிற்சியில் ஈடுபடும் பெண்களிடத்தில் மாதவிடாய் வலி கணிசமாக குறைவதாக சில ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
அக்குபஞ்சர் : பண்டைய சீன மருத்துவ முறையான அக்குபஞ்சர் சிகிச்சையும் மாதவிடாய் தசைபிடிப்புகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் ஊசியை உட்செலுத்தும் சிகிச்சை முறையே அக்குபஞ்சர். இந்த சிகிச்சை பெறும் பெண்களிடத்தில் மாதவிடாய் வலி குறைவாக இருப்பதாக கூறுகின்றன.
உணவு முறையில் மாற்றம் : நம்முடைய டயட்டை மாற்றினாலும் கூட மாதவிடாய் தசைபிடிப்புகளை குறைக்க முடியும். ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த கொழுப்பு மீன்கள், ஆளி விதைகள், வால்நட் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் வீக்கம் குறைந்து வலியை போக்க உதவுகிறது.
மாக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் : மாதவிடாய் தசைபிடிப்புகளின் தீவிரத்தை குறைக்க மாக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மாதவிடாய் சமயத்தில் வரும் வலியின் தீவிரத்தையும் அதன் கால அளவை குறைப்பதிலும் மாக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Read More : பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்..!! விண்ணப்பிப்பது எப்படி..? தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!