For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முட்டை சாப்பிடுவதை திடீரென நிறுத்தபோறீங்களா?… அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்!!

There is no doubt that there are countless benefits in an egg that we eat. It is a source of selenium, vitamin D, B6, B12 and minerals like zinc, iron, copper and proteins. It helps to boost the immune system.
06:04 PM Jun 07, 2024 IST | Mari Thangam
முட்டை சாப்பிடுவதை திடீரென நிறுத்தபோறீங்களா … அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்
Advertisement

எண்ணற்ற பயன்கள் நாம் சாப்பிடும் ஒரு முட்டையில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செலினியம் , விட்டமின் டி, பி 6, பி12 மற்றும் துத்தநாகம்  , இரும்பு , தாமிரம் போன்ற தாதுக்கள் மற்றும் புரதச்சத்துக்களின் மூலமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகின்றது.

Advertisement

நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்களின் களஞ்சியமாக முட்டை வரையறுக்கப்படுகின்றது. கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் இருப்பதால் ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கின்றது. இதனால் இருதய பாதிப்பு குறைகின்றது. தேசிய மருந்தகங்கள் அமைப்பு இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வது எடை குறைப்பிற்கு மிகவும் உதவுகின்றது. அதிக அளவில் ஆற்றலையும் நமக்குத் தருகின்றது. இதனால் ஆரோக்கியம் மேம்படவும் உதவியாக உள்ளது.

முட்டைகளை சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது. புரதம் மற்றும் பிற ஊட்டசத்துக்களின் வசதியான ஆதாரமாக அமைகின்றது. அதே சமயம் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாக உள்ளது.

ஒருவேளை நீங்கள் முட்டை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நீங்கள் முட்டை சாப்பிடுவதை முழுமையாக திடீரென நிறுத்தும் போது உங்கள் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்? .. முட்டையில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும். தவறான முறையில் முட்டை எடுத்துக்கொள்வது உடலில் தவறான பிரதிபலிப்பாக இருக்கும்.

கொழுப்புஅளவு – 50 கிராம் எடை கொண்ட ஒரு முட்டையில் 186 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது. 62 சதவீதம் தினமும் முட்டை எடுத்துக் கொள்ள முடியும் . அதாவது சராசரியாக 3 முட்டையை சாப்பிடலாம். அதற்கு மேற்பட்ட முட்டையை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது கொழுப்பின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்க 1-3 முழு முட்டைகளை சாப்பிட்டார் நல்ல கொழுப்பு அதிகரிக்கின்றது. இதன்மூலம் 70சதவீதமக்கள் கெட்ட கொழுப்பு உடலில் ஏற்படும் மாற்றத்தை அனுபவித்திருக்கவில்லை.

சிலரிடம் இந்த சோதனை மேற்கொண்டபோதுசிலரிடம் கொழுப்பு அதிகரித்துள்ளது. கெட்ட எல்டிஎல் துகள்களின் அளவு அதிகரித்தது. நல்ல எல்டிஎல் உடையோருக்கு இதய நோய்க்கான ஆபத்து குறைவாக இருந்தது. முடிவுகளின்படி ஒரு நாளைக்க மூன்று முழு முட்டைகள் சாப்பிடுவதால் கவலை கிடையாது. டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகள் முட்டையை சாப்பிடும் போது பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என இந்த சோதனை மூலம் தெரிகின்றது.

இது குறிப்பிடத்தக்க பயப்படக்கூடிய ஒன்றல்ல, டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகளின் ஒரு ஆய்வு , வாரத்தில் ஆறு நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளை மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாது. பல ஆரோக்கிய விளைவுகள் நமது உணவின் மற்ற கூறுகளையும் சார்ந்து இருக்கின்றது. குறைந்த கார்ப் உணவு – நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகின்றது. முட்டையுடன் இணைந்தால் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளை அதிகரிக்கவில்லை. டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கான காரணிகளை அதிகரிக்கவில்லை. டைப் 2 நீரிழிவு இருந்தால் கட்டுப்படுத்தப்பட்ட முட்டையால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் .இதன் விளைவாக முட்டை உட்கொள்வதற்கான சாத்தியங்களாக உள்ளது. முட்டை சாப்பிடுவதை நிறுத்தும்போது என்ன நடக்கும்.

மிகவும் எளிமையாக நாம் புரிந்துகொள்ளலாம் .. நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து , ஆற்றலை முட்டை மூலம் எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென நிறுத்தினால் அந்த சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் போகும். இதனால் அதன் விளைவுகள் என்னவோ அது உடலில் தானாக நடக்கும் . இதை தடுத்து நிறுத்த முட்டைக்கு மாற்றாக நாம் வேறு எதையாவது கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும்.  அசைவ உணவுகளுக்கு மாற்றாக சைவ உணவுகள் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லதுதான். டோஃபு, சோயா போன்ற பொருட்கள் முட்டைக்கு பதிலாக சிறந்த மாற்று சைவ உணவாகவும் இருக்கும். உணவை விரிவுப்படுத்துவதால் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

சைவ உணவைச் சுற்றியுள்ள விழிப்புணர்வு காரணமாக பல சைவ உணவு வகைகள் பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகின்றன. இது முட்டைகளை கைவிடுவதற்கு சவாலைக்குறைக்கின்றது. முட்டைக்கு பதில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலம். புரதம் நிறைந்த பொருட்கள் முட்டைக்கு மாற்றாக உள்ள சில சிறந்த மூல உணவுகளை பார்க்கலாம்.. வெளளை கடல் உணவு, இறைச்சி , கோழி, பால் , சீஸ் , தயிர் , பன்றி இறைச்சி , மாட்டு இறைச்சி, பருப்பு , பீன்ஸ் , ஊட்டச்சத்து, ஈஸ்ட் சணல் விதைகள் , பட்டாணி , ஸ்பைருலினா , குயினோவா , , முளைகட்டிய தானிய வகைகள், சோயா பால் , ஓட்ஸ் , சியா விதைகள் , உலர் பழங்கள்  மற்றும் பாதாம் முந்திரி போன்றவை…

முட்டைதான் உங்களுக்கு மிகச்சிறந்த புரதம் நிறைந்த உணவாக இருக்குமேயானால் , அதற்கு மாற்றாக நீங்கள் வேறு பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். முட்டை சாப்பிடுவதை நீங்கள் நிறுத்தினால் உங்களின் உடலுக்கு எதுவும் ஆகாது. ஆனால் புரதத்தின் முதன்மையான மற்றும் ஒரு ஆதாரமாக இருக்கும் ஒருவருக்கு திடீரென முட்டை உட்கொள்வதை நிறுத்தினால் , செரிமான பிரச்சனைகள் , மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

Read more ; சிறையில் இருந்து ஸ்கெட்ச்..!! மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை..!! அதிரவைக்கும் கோவை சம்பவம்..!!

Tags :
Advertisement