For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஈரமான கூந்தலுடன் உறங்கச் செல்பவரா நீங்கள்.? உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.!

05:55 AM Nov 23, 2023 IST | 1newsnationuser4
ஈரமான கூந்தலுடன் உறங்கச் செல்பவரா நீங்கள்   உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை
Advertisement

கூந்தல் அழகை பராமரிப்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஒவ்வொருவருமே நீண்ட தலைமுடியுடன் இருப்பதே விரும்புகின்றனர். நீண்ட அடர்த்தியான மற்றும் கருமையான தலைமுடி பொதுவாக பெண்களுக்கு மிகவும் அழகான உணர்வை தருவதோடு அது ஒரு அழகின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் சில பெண்கள் முடி உதிர்தல் மற்றும் கூந்தல் பிரச்சனைகளால் அவதிக்கு ஆளாகின்றனர்.

Advertisement

கூந்தல் உடைவது மற்றும் உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் நம்முடைய பழக்க வழக்கங்களும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. கூந்தலை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. எனினும் கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்றால் அதற்கான சிரத்தை எடுத்து தான் ஆக வேண்டும். சில பேர் தலை துடைக்க சோம்பல் பட்டு ஈரமான தலைமுடியுடன் உறங்க செல்கின்றனர். இது அவர்களது கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிக முக்கிய காரணியாகும்.

கூந்தல் ஈரமாக இருக்கும்போது தலை துடைக்காமல் உறங்கச் செல்வதால் கூந்தல் உறுதி இழப்பதோடு கூந்தல் உடைய தொடங்குகிறது. ஏனெனில் கூந்தல் ஈரமாக இருக்கும் போது அதில் இருக்கக்கூடிய புரத பிணைப்புகள் வலு இல்லாமல் இருக்கும். இதனால் அவை உறுதித் தன்மைய இழந்து உடைந்து விடுகின்றன. நம் கூந்தல் ஈரமாக இருக்கும்போது நம் கூந்தலின் இலைகளில் இருக்கக்கூடிய க்யூட்டிகல் என்ற செதில்களின் மேற்புறத்தில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கூந்தலின் ஈரப்பதம் காரணமாக வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி தூங்கி விடுகிறது. இதனால் கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

ஈரமான கூந்தலுடன் உறங்க செல்வதால் தலையில் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதோடு கூந்தல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் ரிங்வார்ம் என்று சொல்லக்கூடிய பூஞ்சையின் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக கூந்தல் உதிர்தல் மற்றும் திட்டு திட்டான வழுக்கை ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags :
Advertisement