திருமணமானவரா நீங்கள்? பணத்தை இரட்டிப்பாக்க செம ஐடியா..!! இப்படி முதலீடு பண்ணி பாருங்க..!!
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டில் (PPF) முதலீடு செய்வது நல்ல ரிட்டன்களை பெற்று தருவதோடு, அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இதனால் தான் பல இந்தியர்கள் இந்த அரசு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
PPF திட்டமானது E-E-E பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால், உங்களது முதலீடு, வட்டி மற்றும் மெச்சூரிட்டியின் போது நீங்கள் பெறக்கூடிய தொகை ஆகிய எதற்குமே நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. PPF திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி எக்ஸம்ப்ஷனின் கீழ் கருதப்படுகிறது. எனினும் நீங்கள் உங்கள் முதலீட்டை அதிகரித்து அதன் மூலமாக பெறக்கூடிய வட்டியை இரட்டிப்பாக மாற்றலாம்.
உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்குவது எப்படி?
வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C -இன் கீழ் PPF திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு டேக்ஸ் எக்ஸம்ப்ஷன் வழங்கப்படுகிறது. இதுவே PPF திட்டத்தின் அதிகபட்ச முதலீடு ஆகும். ஒரு ஆண்டில் 12 முறை நீங்கள் உங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆனால், திருமணமான முதலீட்டாளர்களுக்கு மேலும் சில நன்மைகள் கிடைக்கிறது. நீங்கள் PPF அக்கவுண்டை உங்களது வாழ்க்கை துணையின் பெயரில் துவங்கினால், ஒரே நிதியாண்டில் உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்கி, 2 அக்கவுண்டுகளில் இருந்தும் வட்டியை பெறலாம்.
திருமணமான தம்பதிகள் பெறக்கூடிய நன்மைகள் :
ஒரு நபர் தனது வாழ்க்கை துணையின் பெயரில் PPF அக்கவுண்ட்டை திறக்கும் போது, பிற முதலீட்டு ஆப்ஷன்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக PPF அக்கவுண்டில் தொடர்ந்து முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் இவர்களிடம் 2 ஆப்ஷன்கள் உள்ளது. முதலாவது நபர் தனது அக்கவுண்டில் 1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம்.
அதே நேரத்தில் மற்றொருவர் அதே நிதியாண்டில் தனது வாழ்க்கை துணையின் பெயரில் 1.5 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யலாம். இந்த இரண்டு அக்கவுண்டுகளுக்கும் வெவ்வேறு மாதிரியான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, ஒரு அக்கவுண்டிற்கு மட்டும் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கம் கூறலாம். இது போன்ற சூழ்நிலையில் உங்களது PPF முதலீட்டு லிமிட் 3 லட்சமாக இரட்டிப்பாகும். இது E-E-E பிரிவில் இருப்பதால் PPF மூலமாக பெறப்படும் வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகைக்கு முதலீட்டாளர் வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.
அக்கவுண்ட்டை இணைப்பதால் வரி பலன்களில் ஏற்படும் மாற்றம் :
வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 64-இன் கீழ், நீங்கள் உங்களது மனைவிக்கு கொடுக்கும் எந்த ஒரு தொகை அல்லது அன்பளிப்பு உங்களது வருமானத்தின் கீழ் சேர்க்கப்படும். இருப்பினும் PPF திட்டத்தை பொறுத்தவரை EEE பிரிவின் கீழ் வருவதால் இது முழுக்க முழுக்க வரியற்றது. இணைத்தல் விதிகள் காரணமாக எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது.
திருமணமான தம்பதியருக்கான யுக்தி :
அதே நேரத்தில் உங்களது வாழ்க்கை துணையின் PPF அக்கவுண்ட் எதிர்காலத்தில் மெச்சூரிட்டியாகும்போது, உங்களது வாழ்க்கை துணையின் PPF அக்கவுண்டில் நீங்கள் செய்த ஆரம்பகால முதலீடு உங்களது வருமானத்தில் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்படும். இந்த ஆப்ஷன் மூலமாக திருமணமான தம்பதிகள் PPF அக்கவுண்டில் தாங்கள் செய்யும் முதலீட்டை இரட்டிப்பாக மாற்றுவதற்கான வாய்ப்பினை பெறுகின்றனர். ஏப்ரல்-ஜூன் காலாண்டில் PPF அக்கவுண்டிற்கு 7.1% வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மாற்றத்திற்கு உட்பட்டது.