சொத்து ஏதேனும் வாங்க உள்ளீர்களா..? பத்திரப்பதிவுத்துறை சூப்பர் நியூஸ்..!! இனி ரொம்ப ஈசி..!!
வீடுகள், நிலம், வீட்டு மனை போன்ற சொத்துகளை வாங்குவர்கள், தாங்கள் வாங்கும் சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வார்கள். இதற்காக பெறப்படுவதே வில்லங்க சான்றிதழ் ஆகும். குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இதுவாகும். வாங்கப்போகும் அந்த சொத்து இதுவரை யாரிடம் இருந்தது? யாரிடமிருந்து கைமாறி வந்தது? என்ற அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.
இந்த வில்லங்க சான்றிதழ்கள் தற்போது தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது. காரணம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானால், இந்த வில்லங்க சான்றிதழ்தான் உடனடி தேவையாக இருக்கிறது. இந்த வில்லங்க சான்றினை பெற வேண்டுமானால், பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதிருக்கும். இப்போது, ஆன்லைனிலேயே வில்லங்க சான்றினை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக புரோக்கர்கள் தேவையில்லை. யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. 1950 முதல் 1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்க சான்றிதழ்களை வெப்சைட் மூலமாகவே நம்மால் பதிவேற்றம் செய்ய முடியும்.
பதிவுத்துறையின் https://www.tnreginet.net/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று மற்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல, வில்லங்க சான்றை டவுன்லோடு செய்யவும், encumbrance certificate என்ற லிங்கை கிளிக் செய்து பயன்பெறலாம். இந்த வசதிகளுடன் சேர்த்து கூடுதல் வசதி ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதுநாள் வரை, வீடு, நிலம் தொடர்பான பத்திரப்பதிவு முடிந்துவிட்டால், சில நாட்கள் கழித்துதான், அதன் உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வில்லங்க விவரங்களை அறிய முடிந்தது. ஆனால், இப்போது இந்த நடைமுறையை தமிழக அரசு மாற்றியுள்ளது.
அதன்படி, பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, வில்லங்க விவரங்கள் அனைத்தையும் ஆன்லைனில், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பார்த்து கொள்ளலாம். பத்திரப்பதிவு செய்தவரின் செல்போன் நம்பருக்கு மெசேஜ் வாயிலாக ஒரு இணையதள இணைப்புக்கான குறியீடு அனுப்பப்படும். அதன்வழியே சென்றால், தங்கள் சொத்து தொடர்பான பத்திரப்பதிவு விவரம் வில்லங்க சான்றிதழில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்ற மொத்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்லைனில் வில்லங்க சான்றிதழை இலவசமாக பார்க்க வேண்டுமானால்,
https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று, E-services> Encumbrance Certificate > View EC என்ற லிங்க்கை தர வேண்டும். இதில், வில்லங்க சான்றிதழை பார்த்துக் கொள்ளலாம்.
Read More : ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்துக்களை பறித்துவிடுவார்கள்”..!! பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!