For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிக நேரம் செல்போனில் மூழ்கியுள்ளீர்களா..? கண் நீர் அழுத்த நோய் பற்றி தெரியுமா..? பார்வையே பறிபோகும் அபாயம்..!!

Studies have shown that those who look at cell phones for a long time will eventually develop eye strain.
10:23 AM Nov 05, 2024 IST | Chella
அதிக நேரம் செல்போனில் மூழ்கியுள்ளீர்களா    கண் நீர் அழுத்த நோய் பற்றி தெரியுமா    பார்வையே பறிபோகும் அபாயம்
Advertisement

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன்களின் வருகையே முக்கிய காரணமாகும். இதனால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, பயம் , கவலை மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற மனரீதியான பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.. ஆன்லைன் கேம், யூடியூப் வீடியோ, சமூக வலைதளங்கள் என அதிக நேரம் குழந்தைகள் செல்போனில் செலவழிக்கின்றனர்

Advertisement

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதாகவும், அவர்கள் யாரிடமும் பேசுவதில்லை என்றும், முடிந்த வரை குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக ஸ்க்ரீட் டைமால் மூளை ஒரு நேரத்தில் பல விஷயங்களை யோசிக்கிறது. மூளை, இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிக போன் உபயோகத்தால் அடிக்கடி Mood Swings மாறிவிடுகிறது. அதிகமாக மொபைல் பயன்பாட்டாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அதிகம் மொபைல் உபயோகிக்கும் குழந்தைகள் முரட்டுத்தனமாக வளர்வதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இளைய தலைமுறையில் பலர் இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மொபைல் தான். தேவைக்கு மட்டும் உபயோகித்து படிப்படியாக அதன் பயன்பாட்டை குறைப்பது நல்லது.

இந்நிலையில் தான், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செல்போனை நீண்ட நேரம் பார்ப்போருக்கு நாளடைவில் கண் நீர் அழுத்த நோய் வரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நோய்க்கு மருந்து கூட இல்லையாம். நாளடைவில் கண் பார்வை மொத்தமாக பறிபோய்விடும் அபாயம் இருக்கிறதாம். மின் விளக்கை பார்த்தால் சுற்றி வளையங்கள் தெரிவது, தலைவலி, ஒரு பொருளை பார்த்தால் நடுப்பகுதி மட்டும் தெரிவது ஆகியவையே இதன் ஆரம்ப அறிகுறிகள் என்று எச்சரிக்கின்றனர்.

Read More : HDFC வங்கி வாடிக்கையாளரா நீங்கள்..? ஆன்லைனில் பணம் அனுப்ப முடியாது..!! வெளியான அறிவிப்பு..!!

Tags :
Advertisement