உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்..? தமிழ்நாடு அரசு சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா..?
ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்கப்படவில்லை என்றால், ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் அட்டைதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தால், எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் வழங்க மறுப்பதில்லை. ஆதார் புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்” என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
Read More : ’நடிகைகளை ஒரு போதையாகவே பார்க்கின்றனர்’..!! புது குண்டை தூக்கிப் போட்ட சேரன் பட நடிகை..!!