முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீட்டில் நிதிப் பிரச்சனையா..? ரொம்ப கஷ்டப்படுறீங்களா..? இந்த மாற்றங்களை எல்லாம் செய்து பாருங்க..!! ஆரோக்கியமும் அதிகரிக்கும்..!!

Some Vastu Shastra can be followed to remove negative thoughts from home.
05:30 AM Jan 18, 2025 IST | Chella
Advertisement

வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடமாக இருக்கிறது. வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம். நம் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அது நம் உள்ளத்தை பாதிக்கும். வாஸ்து தோசம் இருந்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நிலவக் கூடும்.

Advertisement

அதனால் உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகலாம். பொறாமை எண்ணங்கள் மேலோங்கும். எப்போது எப்படி நடந்து கொள்வீர்கள் என்று தெரியாத அளவுக்கு நடக்கலாம். அதனால் எதிர்மறை எண்ணங்களை அகற்ற வேண்டும். வீட்டில் இருந்து எதிர்மறை எண்ணங்களை அகற்ற சில வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றலாம்.

நேர்மறை எண்ணங்கள் நிலைக்க வேண்டுமா..?

வீட்டில் நேர்மறை எண்ணம் நிலைத்து நிற்க எப்போதும் வீட்டின் வாயிலை சுத்தமாக வைத்திருங்கள். சிறு செடிகளை வீட்டின் வாயிலில் வையுங்கள். வீட்டின் முகப்பு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

அதுதவிர கீழே குறிப்பிட்டுள்ள 5 முறைகளை பின்பற்றிப் பாருங்கள்.. வித்தியாசம் தெரியும்

1. வீட்டின் வடக்கே ஒரு கண்ணாடியை வைக்கவும். அது வீட்டிற்கு நேர்மறையான சக்தியைக் கொடுக்கும். வீட்டில் உள்ளவர்களின் ஆயுளை நீட்டிக்கும் சக்தியையும், நிதி நிலைமை மேம்படும் சூழலையும் கொண்டுவரும். வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு வீட்டில் கண்ணாடி அமைந்துள்ள இடம் மனதிற்கு உற்சாகம் கூட்டும். நேர்மறையான சிந்தனைகளை வகுக்கும். வீட்டின் வடகிழக்கு மூலையை சுத்தம் செய்து அங்கே ஒரு தொட்டி வைத்து அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதை அலங்காரம் செய்யவும். அது நல்ல ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும்.

2. வடக்கு என்பது குபேர மூலை. அங்கிருந்து வீட்டிற்கு நேர்மறை அதிர்வுகள் கிடைக்கும். அதனால் அங்கே இருக்கும் லாக்கரின் முன் ஒரு கண்ணாடி வைத்தால் நிதி நிலைமை உயரும். பிரச்சனைகள் தீரும். வளம் பெறுகும். மகிழ்ச்சி நிலைக்கும். வடக்கிலும், கிழக்கிலும் கண்ணாடிகளை வைக்கலாம். செவ்வக அல்லது சதுர வடிவ கண்ணாடிகளை வைக்கலாம்.

3. நம் வீட்டில் ஏதேனும் குழாய் இருந்து அதிலிருந்து தண்ணீர் வடிந்துகொண்டே இருந்தால், வீட்டில் பணம் தங்காது. அதனால் வீட்டின் குழாயில் நீர் கசிந்தால் அதனை உடனடியாக சரி செய்துவிடுங்கள். அவ்வாறு செய்யாமல் தண்ணீர் வழிந்துகொண்டே இருந்தால் அது கெட்ட சகுணமாகும்.

4. மாலை வேளையில் வீட்டின் வாயில் கதவில் இருபுறமும் விளக்கு ஏற்றுங்கள். தென் பகுதியில் ஒரு விளக்கு ஏற்றுங்கள். இது முன்னோர்களின் ஆசியையும், லக்ஷ்மி தேவியின் அருளையும் பெற்றுத்தரும். தெற்கிலும் ஒரு விளக்கு ஏற்ற வேண்டும். அது முன்னோர்கள் ஆசியை நிறைவாகப் பெற்றுத் தரும். துன்பங்கள் தீர்ந்து இன்பம் மேலோங்கும். எதிர்மறை சிந்தனைகளை விரட்டும்.

5. உங்கள் வீட்டில் உள்ள வடக்கு அல்லது கிழக்கு திசையில் மதிப்புமிகு பொருட்களை வைக்கவும். இது வீட்டில் வளம் செழிக்க உதவும். உங்களை நிதிப் பிரச்சனைகள் துரத்தாது. உங்களது பணி சார்ந்த கணினி போன்ற உபகரணங்களை அங்கே வைக்கலாம்.

Read More : அவசர தேவைக்கு கடன் வேண்டுமா..? இனி ஆதார் கார்டு இருந்தாலே போதும்..!! எத்தனை லட்சம் வரை வாங்கலாம் தெரியுமா..?

Tags :
ஆன்மீகம்செல்வம் செழிக்கும்பணம்
Advertisement
Next Article