தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? பஸ் ஏற அங்க போகாதீங்க.. காரில் செல்பவர்களுக்கு தனி வழி..!! - முழு விவரம் உள்ளே..
இந்த முறை தீபாவளிக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் பலரும் ஷாப்பிங்கில் இறங்கியுள்ளனர். நகரப் பகுதிகளில் தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்படத் தயாராகி வருகின்றனர். பொதுவாக பண்டிகைக் காலங்களில் ஆண்டுதோறும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தீபாவளியையொட்டி 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் : தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 28 முதல் 30 வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன், 4900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 1176 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 2910 பேர் சிறப்பு பேருந்துகளும், என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இரண்டாம் தேதியிலிருந்து நான்காம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 3,165 சிறப்பு பேருந்துகளும் மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9441 பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12, 606 பேருந்துகள் இயக்கப்படுகின்றன
காரில் சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு : கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து ஓஎம்ஆர் திருப்போரூர் செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்?
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் : புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு : கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
மாதவரம் புதிய பேருந்து நிலையம் : பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
பேருந்து சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 94450 14436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004256151, 04424749002, 04426280445, 04426281611 ஆகிய எண்களில் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படுஉள்ளது.
Read more ; பாஜகவில் இருந்து விலகிய நடிகை கெளதமிக்கு அதிமுக-வில் முக்கிய பொறுப்பு..!!