உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்புக் கணக்கு தொடங்க போறீங்களா..? அப்படினா இதை தெரிஞ்சிக்கோங்க..!!
பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் திருமணம், மேற்படிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக தற்போதில் இருந்தே குழந்தைகளின் பெயரில் பணத்தை சேமிக்க விரும்புகின்றனர். இவ்வாறு குழந்தையின் பெயரில் பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் அதற்கு என்று வங்கிகளில் சில விதிமுறைகள் இருக்கிறது.
அதாவது 10 வயதுக்குட்பட்ட குழந்தையின் பெயரில் சேமிப்பை தொடங்க பெற்றோர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ அந்த வங்கியில் குழந்தைக்கு வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். மேலும் கட்டாயமாக KYC விவரங்களை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.
மைனர் குழந்தைகளாக இருக்கும் வரைக்கும் சேமிப்புக் கணக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் கண்காணிப்பில் இருக்கும். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை சேமிப்பு கணக்கு நிர்வகிக்க வங்கிகள் அனுமதிக்கின்றன. சேமிப்புக் கணக்கை பொறுத்தவரை தற்போது தபால் நிலையங்களில் அதிகம் பேர் கணக்கு தொடங்குகின்றனர். மேலும், அதில் வட்டியும் அதிகமாக கிடைக்கிறது.