முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புதிய தொழில் தொடங்க போறீங்களா..? அரசு வழங்கும் நிதியுதவிக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

04:43 PM Nov 11, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் அரசு சார்பில் சுயதொழில் தொடங்குவோருக்கு பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதாவது, நடப்பாண்டில் சுய தொழில் தொடங்குவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு 3 கோடியே 55 லட்சம் தொகையை மானியமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பதாரர்கள் அரசு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அதேசமயம் தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் போன்ற திட்ட மதிப்பீட்டில் 25% மானியம் அதாவது அதிகபட்சம் 75 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பட்டப் படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ, தொழில்சார் பயிற்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்“ என தெரிவித்துள்ளார்.

Tags :
தமிழ்நாடு அரசுபுதிய தொழில்மாவட்ட ஆட்சியர்
Advertisement
Next Article