For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதுசா தொழில் தொடங்க போறீங்களா..? மத்திய அரசின் ரூ.10 லட்சம் கடன் திட்டம் பற்றி தெரியுமா..? மானியமும் உண்டு..!!

The central government has launched a scheme to provide loans of up to Rs.10 lakh to young people to start businesses.
05:20 AM Nov 13, 2024 IST | Chella
புதுசா தொழில் தொடங்க போறீங்களா    மத்திய அரசின் ரூ 10 லட்சம் கடன் திட்டம் பற்றி தெரியுமா    மானியமும் உண்டு
Advertisement

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு ஆதார் கார்டு மட்டுமே போதுமான ஆவணமாக சொல்லப்படுகிறது.

Advertisement

Prime Ministers Employment Generation Programme (PMEGP) என்று சொல்லப்படும் பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக ரூ.2 லட்சம் - ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் கிராமப்புற பயனாளிகளுக்கு கடனில் இருந்து 35% மானியமும், நகர்புறத்தில் இருந்து விண்ணப்பம் செய்வோருக்கு 25% மானியமும் வழங்கப்படுகிறது.

தகுதிகள் என்னென்ன..?

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். நீங்கள் தொடங்கும் தொழில் சிறு, நடுத்தர அல்லது உள்நாட்டு உற்பத்தி வர்த்தகமாக இருந்தால் கடன் வழங்கப்படும். அதேபோல், மத்திய அரசின் இந்த கடன் உங்கள் செலவைப் பொறுத்து திட்டத்தில் மாற்றங்கள் இருக்கும். மேலும் பகுதி, வகை மற்றும் திட்டத்தின் செலவை பொறுத்து மானியங்கள் இருக்கும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை..?

ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட், வணிகம் தொடர்பான ஆவணங்கள், ஜி.எஸ்டி மற்றும் நில ஆவணங்கள் பதிவு எண் ஆகியவை தேவைப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி..?

* PMEGP எனப்படும் https://www.kviconline.gov.in/pmegpeportal/bankModule/index.jsp என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

* பின் உங்களுக்கென தனி கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

* அதில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மெயில் ஐடி, போன்ற தகவல்களுடன் இன்னும் சில தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

* அதை முடித்ததும் உங்கள் பெயரில் கணக்கு உருவாகிவிடும்.

* பின் விண்ணப்ப படிவம் தோன்றும். அதில் வணிகத்தின் பெயர், அதன் வகை, முகவரி, உள்ளிட்ட தகவல்களை கொடுக்க வேண்டும்.

* அதோடு தேவையான ஆவணங்கள் கேட்கப்படும். அனைத்தையும் சரியாக பூர்த்து செய்த பின் சமர்ப்பிக்க வேண்டும்.

* அவ்வாறு செய்தபின் உங்களுக்கான கோரிக்கை படிவம் சென்றுவிடும்.

Read More : பெண்களே உஷார்..!! முகத்தில் வளரும் முடியை ஷேவ் செய்வதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

Tags :
Advertisement