For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் வீட்டில் மணி பிளான்ட் செடி வைக்கப்போறீங்களா..? இவ்வளவு நன்மைகளா..? எப்படி பராமரிப்பது..?

04:48 PM May 03, 2024 IST | Chella
உங்கள் வீட்டில் மணி பிளான்ட் செடி வைக்கப்போறீங்களா    இவ்வளவு நன்மைகளா    எப்படி பராமரிப்பது
Advertisement

மணி பிளான்ட் செடிகள் தரும் பல்வேறு மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா? மணி பிளான்ட் செடிகள் சரியாக வளரவில்லையா? இதோ சூப்பரான டிப்ஸ்...

Advertisement

காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும் தன்மை இந்த மணிபிளான்ட்டுக்கு உண்டு. இதன் காரணாக, நம்மை சுற்றியுள்ள மாசு காற்று உள்வாங்கப்பட்டு, நமக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நல்ல ஆக்ஸிஜைனை வெளியிடுகிறது. அந்தவகையில், ஆக்ஸிஜனை வெளியிடும் தாவரங்களில் முதலிடத்திலும் உள்ளது மணி பிளான்ட்கள்.

மாசு அதிகரிக்காமல், அந்த மாசை கட்டுப்படுத்துகிறது. அதனால்தான், எப்போதுமே இந்த செடியை வீட்டுக்குள், முக்கியமாக ஹால், சமையலறை பகுதிகளில் வைக்க சொல்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஹாலிலும், வீட்டின் நுழைவாயிலிலும் இந்த செடிகளை வைப்பதால் டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் இந்த செடி கிரகித்து கொள்கிறது.

அதேபோல, எந்த வீட்டில் மணி பிளான்ட்கள் வளர்க்கப்படுகிறதோ, அங்கெல்லாம் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷப்பூச்சிகள் வராது என்று கூறப்படுகிறது. முக்கியமாக, எதிர்மறை ஆற்றல்களை இழுத்துக் கொண்டு, நேர்மறை ஆற்றல்களை வீட்டில் அதிகரிக்க செய்யும். இதனால் வீட்டில் இருப்பவர்களின் உடல் நிலையும், மன நிலையும் பாதுகாக்கப்படுகிறது. அசுத்தமான காற்றை வடிகட்டுவதுடன், ஆக்ஸிஜன் வரத்தை அதிகரிக்க செய்கிறது. அத்துடன், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து தூக்கக்கோளாறுகளையும் மேம்படுத்துகிறதாம்.

எப்படி வளர்ப்பது? இந்த செடியை வளர்க்க வேண்டுமானால், அதிக சூரிய ஒளி இதற்கு தேவையில்லை. ஆனால், குடுவையில் இந்த செடியை வளர்க்கக்கூடாது. தரையில் வைத்து வளர்த்தால், வேர்கள் நன்றாக பரவி வளரும். அப்படி தரையில் படரவிடாமல், கயிற்றில் கட்டி படர விட வேண்டும். இந்த செடியில் பழுத்த இலைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். காரணம், அது வீட்டில் உள்ளவர்களின் உடல்நலக்குறைவை குறிக்கிறதாம். இலைகள் காய ஆரம்பித்தாலும் வெட்டிவிடலாம்.

எப்படி பராமரிப்பது? எப்போதுமே மணி பிளாண்ட் பசுமையாக இருக்க வேண்டும். அதன் இலைகளை மஞ்சள் நிறமாக மாறும்வரை விடக்கூடாது. இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில், தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை செடியின் மீது தெளித்தால், இலைகளின் மஞ்சள் நிறம் நீங்கிவிடும். தேங்காய் எண்ணெய்க்கு பதில், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய் இப்படி ஏதாவது ஒன்றை சேர்க்கலாம்.

கிளைகள்: அதேபோல, மணி பிளாண்ட் கொடி வகை என்பதால், அது வளரும்போது படர்வதற்கு ஏற்றவாறு கயிற்றை கட்டிவிட்டு, அதை செடியோடு சுற்றிவிட வேண்டும். அதிகமான கிளைகள் அல்லது தண்டுகள் வந்தாலும், அதனை லேசாக வெட்டிவிட்டு கொண்டே வந்தால், வேகமாக வளர உதவியாக இருக்கும். வைட்டமின் E, C கேப்ஸ்யூலை வெட்டி, மணி பிளாண்ட் பாட்டிலில் வைக்கலாம். அல்லது காலாவதியான மருந்துகளையும் மணி பிளாண்ட் பாட்டிலில் வைக்கலாம். இவையெல்லாம் மிகசிறந்த உரமாகி, செடியின் வளர்ச்சி செழிப்பாக உதவும்.

Read More : 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!

Advertisement