வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் முன் இந்த விஷயங்களை மறந்துறாதீங்க..!! எந்த வகையான சிலைகளை வைக்க வேண்டும் தெரியுமா..?
பொதுவாகவே நம் வீட்டில் விநாயகப் பெருமானின் சிலை வைப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. ஆனால், வாஸ்து சாஸ்திரத்தில் இதற்கென சில விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம், புகழ் மற்றும் மகிழ்ச்சி தேவை என்றால், உங்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைக்கும்போது நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
விநாயகர் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அளிப்பவர் என்று கூறப்படுகிறது. தம் பக்தர்களின் அனைத்துத் தடைகளையும் நீக்கி காப்பவர். ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் எந்த மாதிரியான விநாயகர் சிலை வைக்க வேண்டும். இதற்கும் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த வகையான விநாயகப் பெருமானின் சிலை மங்களகரமானதாகக் கருதப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* வாஸ்து சாஸ்திரத்தின்படி, மாம்பழத்தோல் மற்றும் வேப்பங்கொட்டையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டிற்குள் கண்டிப்பாக வைக்க வேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயிலில் விநாயகப் பெருமானின் சிலை வைப்பது மிகவும் நல்லது.
* வாஸ்து சாஸ்திரத்தின்படி, வெள்ளெருக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைக்க வேண்டும். தினமும் வழிபட வேண்டும். அத்தகைய சிலையை வீட்டில் வைப்பதினால் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது.
* வாஸ்து சாஸ்திரத்தில் படிகமானது சிறந்த உலோகமாகக் கருதப்படுகிறது. நம் வீட்டில் படிகத்தால் ஆன விநாயகர் சிலையை வைத்தால், அது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானுடன் ஸ்படிக லட்சுமியை வழிபட்டால் செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும் உண்டாகும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் விநாயகர் சிலையை வைக்கும் போதெல்லாம், அதை எப்போதும் உட்கார்ந்த நிலையில் வைக்க வேண்டும். விநாயகர் சிலையை வீட்டின் கதவுக்கு வெளியே வைக்கக் கூடாது. நின்ற கோலத்தில் விநாயகர் சிலையை நிறுவ விரும்பினால், அதை உங்கள் பணியிடம் அல்லது அலுவலகத்தில்தான் வைக்க வேண்டும்.
* விநாயகர் சிலை வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. முன்னேற்றத்திற்கு, வீட்டில் வெண்கல நிற சிலையை வைக்க வேண்டும் அல்லது வெள்ளை நிற சிலை வைத்திருப்பதும் முன்னேற்றத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும், வீட்டின் வாசலில் அத்தகைய சிலையை நிறுவக் கூடாது.
Read More : ”எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு தேவை”..!! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!!