சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய போறீங்களா..? எந்த திட்டத்திற்கு வட்டி அதிகம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!
ஒவ்வொரு குடிமகனும் தங்களது எதிர்காலத்துக்காக சேமிக்க தொடங்குகின்றனர். கல்வி, திருமணம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காக சேமிப்பு அவசியமாகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் எப்படி சேமிப்பது என தெரியாமல் குழம்பி தவிக்கின்றனர். பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக சேமிப்பதற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தினசரி முதலீடு, மாத முதலீடு, ஆண்டு முதலீடு என மக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களில் முதலீடு செய்துக்கொள்ளலாம்.
புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் நிலையில், எந்த திட்டத்தில் எத்தனை சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
13 சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் :
அஞ்சலக சேமிப்பு திட்டம் 4.0%
1 ஆண்டு டெபாசிட் 6.9%
2 ஆண்டு டெபாசிட் 7%
3 ஆண்டு டெபாசிட் 7.10%
5 ஆண்டு டெபாசிட் 7.50%
5 ஆண்டு ஆர்.டி திட்டம் 6.7%
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் 8.2%
மாதாந்திர வருமான கணக்கு 7.4%
தேசிய சேமிப்பு சான்றிதழ் 7.7%
சுகன்யா சம்ரிதி யோஜனா 8.2%
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் 7.5%
பி.பி.எஃப் 7.1%
கிஷான் விகாஸ் பத்ரா 7.5%
Read More : EPFO கணக்கில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்..!! உங்களுக்கு சேர்ந்துவிட்டதா..? எப்படி தெரிந்து கொள்வது..?