ஸ்கூட்டர் வாங்கப்போறீங்களா..? ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. பயணிக்கலாம்..!! சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகமாகி வருகிறது. குறிப்பாக ஓலா மற்றும் ஏத்தரின் வருகைக்குப் பிறகு ஏராளமான மக்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், ஓலாவுக்கும் போட்டியாக சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் களம் இறங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டர் அறிமுகத்தின் போதே சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் :
சிம்பிள் எனர்ஜி ஒன் ஸ்கூட்டரை பொருத்தவரை சின்ன பேட்டரியில் 236 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கக் கூடியது. இதன் பெரிய பேட்டரி ஆப்ஷனில் 300 கி.மீ. வரை ரேஞ்ச் தரும் என சொல்லப்படுகிறது. இது 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2.77 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 105 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் அம்சம் கொண்டது.
இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை பொருத்தவரை 4.8 கிலோ வாட் ஹவர் மற்றும் 8.5 கிலோ வாட் ஹவர் என 2 பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் பிரேக்கை பொருத்தவரை 2 வீலர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கம்பைன் பிரேக்கிங் சிஸ்டத்துடன் சேர்ந்து இயங்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் சீட்டிற்குக் கீழே 30 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
பிரேஸன் பிளாக், நம்ம ரெட், அசூர் ப்ளூ மற்றும் கிரேஸ் ஒயிட் ஆகிய கலர்களில் இது கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் டச் ஸ்கிரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விலையைப் பொருத்தவரை ஸ்டாண்டர்டு வேரியன்ட் ரூ1.10 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ்ட்ரா ரேஞ்ச் வேரியன்ட் ரூ1.45 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Read more ; வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்..!!