சொந்த வீடு கட்டப்போறீங்களா..? இந்த திட்டத்தில் விண்ணப்பித்தால் ரூ.3.50 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
கலைஞர் கனவு இல்லம் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 2024-25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார். அதன்படி, ரூ.400 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1,451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.3,50,000 வழங்கப்படும். இந்த தொகைக்கு ஏற்ப கட்டுமானப் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் கட்டுமான பணிகளும் செய்து தரப்படுகிறது. மேலும், தங்களது வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினால் ரூ.1.50 லட்சம் வரை கடனுதவி வங்கிகள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். கலைஞர் வீடு கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கனவே அரசால் கணக்கெடுப்பிலும் மேற்கொள்ளப்பட்ட 3 வகை விடுபட்ட குடிசையில் வசிப்பவர்கள் வீடு வழங்கிடக் கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 3 நிலைகளில் ஒற்றை சாளர கணக்கு மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும்.
Read More : வந்தாச்சு QR Code..!! இனி நீங்கள் வாங்கும் மருந்து, மாத்திரைகள் போலியானதா என்பதை ஈசியா கண்டுபிடிக்கலாம்..!!