முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

1997-2012ஆம் ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள்..? உங்களுக்கு சீக்கிரமே வயதாகிவிடும்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

04:14 PM Feb 05, 2024 IST | 1newsnationuser6
Advertisement

இந்த உலகில் பெரும்பாலானோருக்கு வயதாவதே பிடிக்காது. நம்மில் அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வயதாகும் செயல்முறையைத் தாமதப்படுத்தவே விரும்புகிறோம். ஆனால், என்ன செய்தாலும் வேகமாக வயதானால் அனைவருக்கும் கடுப்பாகவே செய்யும். இப்போது 1997 - 2012ஆம் ஆண்டிற்குள் பிறந்த ஜென் இசட் (Gen Z) தலைமுறை அந்த சிக்கலைத் தான் எதிர்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

பொதுவாக உலகில் கடந்த காலங்களில் பிறந்தவர்களை ஜென் எக்ஸ், மில்லினியல்கள், ஜென் இசட் என பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது 1965 - 1980 வரை பிறந்தவர்கள் ஜென் எக்ஸ் என்றும், 1981 - 1996 வரை பிறந்தவர்கள் பில்லினியல்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். அதேபோல 1997 - 2012 வரை பிறந்தவர்கள் ஜென் இசட் என்று அழைக்கப்படுவார்கள். இதில் ஜென் இசட் தான் இளையவர்கள். அப்போது அவர்கள் தானே இளமையாகத் தெரிய வேண்டும். ஆனால், உண்மையில் அப்படி இருப்பதில்லை.

ஜென் இசட் தலைமுறையினர் மற்ற தலைமுறையினரைக் காட்டிலும் வேகமாக வயதாகிறார்களாம். இதுகுறித்து இன்ஸ்டா பிரபலம் ஜோர்டான் ஹவ்லெட் என்பவர் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதாவது 26 வயதே ஆன அவர், தாயுடன் வெளியே செல்லும் போதெல்லாம் அவர்கள் அக்கா- தம்பியா எனப் பலரும் கேட்கிறார்களாம். அதாவது தனக்கு வேகமாக வயதாவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகே இந்த விவாதம் இணையத்தில் சூடு பிடித்தது. ஜென் இசட் பிரிவினர் பலரும் தங்களுக்கும் வேகமாக வயதாவதாகக் கூறுகின்றனர். இது இணையத்தில் பெரும் விவாதமானது.

இதற்கிடையே, ஜென் இசட் பிரிவினர் வேகமாக வயதாக என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஜென் இசட் பிரிவினர் தான் முழுக்க முழுக்க டிஜிட்டல் காலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இதனால் அவர்களிடம் வெளியே சென்று விளையாடும் பழக்கம் இருப்பதில்லை. அதேநேரம் சோசியல் மீடியாவில் ஸ்கின் கேர் என்று வரும் பல வித க்ரீம்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவரின் தோலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் யாரோ சோஷியல் மீடியாவில் சொல்கிறார்கள் என்பதற்காக நாம் இதுபோன்ற க்ரீம்களை பயன்படுத்தினால் அது ஆபத்தில் தான் முடியும். அதுவும் இப்போது 11- 12 வயதிலேயே இதுபோன்ற க்ரீம்களை பயன்படுத்துகிறார்கள். இதுவே முக்கியமான ஒரு காரணம்" என்றார்.

மேலும், இந்த தலைமுறையினருக்குக் கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால் மிகவும் குறைந்த வயதிலேயே இவர்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றுக்கு அடிமையாகிறார்கள். இன்னும் சிலர் வேறு போதை பழக்கங்களுக்கும் அடிமையாகிறார்கள். இவை நமது உடலில் தேவையில்லாத மோசமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதில் உணவு முறை ரொம்பவே முக்கியமானது. இந்த ஜென் இசட் பிரிவினர் மற்ற தலைமுறையினரைக் காட்டிலும் அதிகப்படியான துரித உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இந்த பிராசஸ்ட் உணவுகள் நமது உடலில் பருமன் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இப்போது உணவு டெலிவரி செயலி மூலம் உட்கார்ந்த இடத்திலேயே உணவுகளை ஆர்டர் செய்ய முடிவதால் அதுவும் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஜென் இசட் பிரிவுக்கு இருக்கும் மற்றொரு முக்கிய காரணம் அழுத்தம். மற்ற அனைத்து தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஜென் இசட் அதிக அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதையே ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உலகம் போட்டி நிறைந்த ஒன்றாக மாறும் நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அதிக எதிர்பார்ப்பை வைக்கிறார்கள். இது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் லைக் வரவில்லை என்றால் கூட இந்த தலைமுறையினர் அழுத்தத்திற்குள்ளாகின்றனர். இவை அனைத்தும் சேர்ந்து தான் இந்த தலைமுறையினர் வேகமாக வயதாகக் காரணமாக இருக்கிறது.

Tags :
ஆரோக்கியமற்ற உணவுதலைமுறைபிறந்தநாள்வயதுஜென் இசட்
Advertisement
Next Article