முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் போனில் அடிக்கடி விளம்பரங்கள் வருகிறதா..? எரிச்சலா இருக்கா..? அப்படினா இதை பண்ணுங்க..!!

With mobile phones, the world is in the palm of our hands. In such an environment, just having a mobile phone is enough, we can easily complete most of the work.
03:56 PM Aug 06, 2024 IST | Chella
Advertisement

மொபைல் போன் மூலம் உலகமே நம் உள்ளங்கையில் அடங்கிவிடும். இத்தகைய சூழலில் மொபைல் போன் இருந்தாலே போதும், பெரும்பாலான வேலைகளை நம்மால் எளிதில் முடித்துவிட முடியும். ஆனால், சில முக்கியமான நேரங்களில் நம் மொபைல் திரையில் தோன்றும் விளம்பரங்களால் நமக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் விளம்பரங்களை தவிர்க்க கூடிய அம்சங்கள் உள்ளன.

Advertisement

இதன் மூலம் நம் மொபைல் போனுக்கு வரும் விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஆன்ராய்டு யூசர்கள் பலர் தங்கள் மொபைல் போனுக்கு வரும் என்னற்ற விளம்பரங்களால் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், ஆன்ராய்டு போன்களுக்கு வரும் விளம்பரங்களை கூட தடுக்க முடியும் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். தற்போது உங்களுக்கும் அந்த சீக்ரெட்டை சொல்கிறோம்.

* முதலில் செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்து கூகுள் செயலியை தொட வேண்டும்.

* பின்னர், Manage Google account என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* தற்போது உங்களுக்கு Data and Privacy என்ற ஆப்ஷன் திரையில் தோன்றும்.

* அதை ஸ்க்ரால் செய்தால் Personalized Ads என்று தோன்றும்.

* பின்னர் Personalized Ads என்ற ஆப்ஷனுக்கு கீழே இருக்கும் My ad center என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது Personalized Ads-ஐ டர்ன் ஆஃப் செய்ய வேண்டும்.

* பின்னர் மீண்டும் Settings-க்கு சென்று கூகுளை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், Ads என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து, Delete Advertising ID என்பதை கிளிக் செய்து நீக்க வேண்டும். அவ்வளவு தான் இனி உங்கள் மொபைல் போனுக்கு விளம்பரங்கள் வராது.

Read More : வங்கதேச வன்முறை..!! சிறையில் இருந்து தப்பியோடிய 595 கைதிகள்..!! பயங்கர ஆயுதங்களுடன் காத்திருப்பதால் பரபரப்பு..!!

Tags :
கூகுள்செல்போன்யூடியூப்விளம்பரங்கள்
Advertisement
Next Article