For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! அப்போது இதை கண்டிப்பா தெரிஞ்சிவச்சிகோங்க..!

05:56 AM Apr 22, 2024 IST | Baskar
ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்    அப்போது இதை கண்டிப்பா தெரிஞ்சிவச்சிகோங்க
Advertisement

ஐஸ்கிரீமை விரும்பாதவர்களே இருக்க முடியாது. ஐஸ்கிரீமை சிறியவர்கள் எப்படி ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்களோ, அப்படியே பெரியவர்களும் ஐஸ்கிரீமை விரும்பி உண்கிறார்கள். காரணம் அதன் சுவை, அதோடு வெயிலில் குளிர்ச்சியான இதமான உணர்வை கொடுக்கும்.

Advertisement

கோடைக்காலம் தொடங்கி வெயில் பட்டையை கிளப்புகிறது. எங்கு பார்த்தாலும் ஜூஸ் கடைகளிலும், ஐஸ்கிரீம் கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. கொஞ்சம் ஜில்லுனு எதையாவது சாப்பிட்டு உடலுக்கு குளிர்ச்சி ஏற்றலாம் என மக்கள் நினைத்து அதிகளவில் ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், ஐஸ்கிரீமை அதிகளவில் சாப்பிட்டால் கெடுதி என்று சொல்வார்கள். ஆனால், அதிலும் சில நன்மைகள் இருக்கின்றன. இதை தான் சில நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி என்ன நன்மைகள் ஐஸ்கிரீமில் உள்ளன என்பதை பார்க்கலாம்…!

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீமை சாப்பிடும்போது உடனடியாக ஆற்றல் கிடைக்கிறது. ஏனென்றால் அதில் கிரீம் சேர்க்கப்பட்டுள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும். பால் சார்ந்த உணவுகளில் புரதச்சத்து அதிகளவில் காணப்படும். அதுபோல ஐஸ்கிரீமில் கிரீம் மற்றும் பால் அதிகளவில் உள்ளதால் புரதச்சத்து இதில் இருந்து கிடைக்கிறது. ஐஸ்கிரீமில் பழங்களையும் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். இதோடு மட்டுமில்லாமல், அதிகளவில் நம் உடலுக்கு Antioxidants கிடைக்கிறது. ஐஸ்கிரீம் சுவைக்கானது மட்டுமில்லை, மெண்டல் ஹெல்த்தையும் சீர்படுத்துகிறது. பாலில் டிரீப்ட்ரோஃபேன்(tryptophan) இருப்பதால் அது சந்தோஷமான ஹார்மோனை உண்டுப்பண்ணுகிறது. மேலும் ஐஸ்கிரீமில் நீரின் அளவு அதிகளவில் இருப்பதால் இதை கோடைக்காலத்தில் உண்ணும்போது டீஹைட்ரேசன்(Dehydration)ல் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Read More: ChatGPT போல் இனி Whatsapp-லும் வந்தது AI Chatbot ; எப்படி பயன்படுத்துவது?

Tags :
Advertisement