இனி பேக் அப்-களுக்கு பணம் வசூலிக்கப்படும்..! கூகுள் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…
உலகெங்கிலும் உள்ள பல கோடி கணக்கான மக்களின் தகவல் தொடர்பு சேவையில் முக்கிய பங்கு வகிப்பது வாட்ஸ் ஆப். இதில் குறுந்தகவல்களை அனுப்பும் வசதி, ஆடியோ கால், வீடியோ கால், ஆடியோ மெசேஜ் மட்டும் வீடியோ மெசேஜ் என பலவிதமான சேவைகளையும் வழங்கி வருகிறது.
சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவைகள் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கூகுள் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் இணைந்து சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக அறிவிக்கையை வெளியிட்டு இருக்கும் கூகுள் மற்றும் வாட்ஸ் ஆப் இனி பேக் அப்-களுக்கு பணம் வசூலிக்கப்படும் என தெரிவித்திருக்கிறது. நம்முடைய குறுஞ்செய்திகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை பேக் அப் எடுத்து சேமித்து வைக்கப்படுவதில் புதிய வரைமுறைகளை வெளியிட்டு இருக்கிறது
இனி பயனாளர்களின் வாட்ஸ் அப் பேக் அப்கள் அந்த பயனாளரின் கூகுள் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டு க்லௌட் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூகுள் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.