ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்களா நீங்க...? இதை மட்டும் மறக்காதீங்க...
இன்றைய உலகில் பண பரிமாற்றத்திற்கு வங்கிகளின் தேவை அதிகளவில் உள்ளது. டிஜிட்டல் முறையில் நம்மால் ஒரு வங்கி கணக்கை திறக்க முடியும். 24 மணி நேரமும் எங்கிருந்தும், யாருக்கு வேண்டுமானாலும் டிஜிட்டல் மூலம் பணம் அனுப்பும் வசதி, ஆன்லைனில் KYC பதிவு, ஆன்லைனில் புதிய வங்கி கணக்கு திறப்பு செயல்முறை என பல்வேறு வசதிகள் உள்ளன. பொதுமக்கள் பலர் 3 முதல் 4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இன்னும் பலர் அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளையும் வைத்துள்ளார்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருந்தால் ஏற்படும் அடுத்த பிரச்சனை வங்கிக் கணக்குகளின் செயலற்ற தன்மை ஆகும். பல வங்கி கணக்குகளை பயன்படுத்தும் போது, அதில் சில வங்கிகளை மட்டுமே அடிக்கடி பயன்படுத்துவோம். இதனால் மற்ற வங்கி கணக்குகள் பராமரிப்பின்றி இருக்கும். பிறகு நீண்ட நாட்கள் எந்தவித பரிவர்த்தனைகளும் இல்லாமல் போகும் போது வங்கி அந்த குறிப்பிட்ட கணக்கை நீக்கலாம் அல்லது மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்யவும் வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனைகளை தவிர்க்க அவ்வப்போது அனைத்து வங்கி கணக்குகளிலும் குறைந்த தொகையில் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அத்துடன் வங்கிக்கணக்கில் எப்போதும் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறினால் வங்கி கணக்கு எதிர்மறை ஆகிவிடும். எனவே குறைந்தபட்ச தொகையை வைத்திருப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.