நோட்...! சிலிண்டர் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்...? உடனே இதை அப்டேட் செய்ய வேண்டும்...!
சிலிண்டர் விநியோகம் செய்யும்போது வழங்கப்படும் ரசீதில், e KYC நிலுவையில் உள்ளது என்ற முத்திரையை ஏஜென்சிகள் பதிவு செய்து அனுப்புகின்றன.
கேஸ் சிலிண்டர் பயனாளர்களின் உண்மை நிலையை அறிய, கை விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், பயனாளர்கள் பலர் இன்னும் e KYC அப்டேட் செய்யவில்லை என கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. மேலும், சிலிண்டர் விநியோகம் செய்யும்போது வழங்கப்படும் ரசீதில், e KYC நிலுவையில் உள்ளது என்ற முத்திரையை ஏஜென்சிகள் பதிவு செய்து அனுப்புகின்றன. எனவே நீங்கள் இன்னும் e Kyc அப்டேட் செய்யவில்லை என்றால் உடனடியாக அதனை செய்து விட வேண்டும். இல்லையென்றால் அரசு வழங்கும் மானியம் உங்களுக்கு கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
e kyc அப்டேட் செய்வது எப்படி...?
e KYC-ஐ வீட்டிலிருந்தும் ஆன்லைனிலேயே அப்டேட் செய்ய முடியும். முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். அங்கே வலது பக்கத்தில் பாரத் கேஸ்,HP கேஸ், இண்டேன் சிலிண்டர் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதை கிளிக் செய்யவும். அதன் பிறகு தொலைபேசி எண்ணுடன் உள்நுழையவும். உங்கள் e KYC புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதை அங்கு நீங்கள் சரிபார்க்கலாம்.
உங்கள் விவரங்கள் தெரியவில்லை என்றால், need kyc என்பதைக் கிளிக் செய்தால், Kyc படிவம் தோன்றும். அதை நிரப்பி உங்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் ஏஜென்சியிடம் கொடுக்க வேண்டும். ஆன்லைனில் படிவத்தைச் சமர்ப்பித்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் உங்கள் e KYC செயல்முறை முடிவடையும். அதன் பிறகு மானிய விலையில் சிலிண்டர் பெறலாம். KYC ஏற்கனவே அப்டேட் செய்திருந்தால் மானியம் பெறுவதில் பிரச்சனை இல்லை.