கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி வட்டி அதிகரிக்கும் அபாயம்..!! உச்சநீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி..!!
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. எதிர்பாராதவிதமாக ஏற்படும் செலவீனங்களை சமாளிக்க பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த கடனை செலுத்தாவிட்டால் வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த வட்டியானது 30 சதவீதத்திற்கும் மேல் இருக்கக் கூடாது என கடந்த 2008ஆம் ஆண்டு, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் தீர்ப்பு வழங்கியது. வட்டி பற்றிய நடைமுறைகளை ரிசர்வ் வங்கி தான் பிற வங்கிகளுக்கு உத்தரவிட முடியும். நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் சொல்வது முறையல்ல என்று ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து வங்கிகள் சுப்ரீம் கோர்டை நாடியது.
இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 22) நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரெடிட் கார்டு கடன்களுக்கு அதிகபட்ச வட்டியாக 30%-க்கு மேல் இருக்கக் கூடாது என்ற தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது. இதனால், இனி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கடன் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால், அதிகளவு வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
Read More : அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட BSNL..!! இனி சிம் கார்டே தேவையில்லை..!! வருகிறது eSIM..!!