"நீ சந்தோசமா இருந்தா போதும் மா" மனைவியை அவரது கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்..
பீகார் மாநிலத்தின் சஹர்சா பகுதியில் கணவன் மனைவி இருவரும், தங்களின் மூன்று குழந்தைகளுடன் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஆனால் அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில், இவர்களின் உறவு குறித்து அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், தனது மனைவியின் கள்ள உறவு குறித்து அவரது கணவர் ஆத்திரம் அடையவில்லை. மாறாக, அவர் தனது மனைவிக்கும் அவரது காதலனுக்கும் தனது முன்னிலையில் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், அந்த பெண்ணின் காதலன் குங்குமத்தை நெற்றியில் வைக்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியை தலைமை தாங்கின முன்னாள் கணவர், "உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் அது இருவரது பொறுப்பு தான்" என்று கூறுயுள்ளார். இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபருக்கும், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை பார்த்த சமூக வலைதள வாசிகள் பலர், அந்த பெண்ணின் கணவரின் இந்த முடிவை பாராட்டுகின்றனர். ஆனால், ஒரு சிலர் இது போன்ற செயல்கள் கலாச்சாரத்தை சீர் கெடுக்கும் வகையில் உள்ளது என்று கூறி விமர்சித்து வருகின்றனர்.