கோவக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா..? கண்டிப்பா உணவில் சேர்க்க மறந்துறாதீங்க..!!
சில, பல ஆண்டுகளுக்கு முன்னால் வயலோர வேலிகளிலும், புதர்களிலும் தாமாக பரவிக் கொடி வகையாக மட்டுமே கோவக்காய் அறியப்பட்டது. அதை யாரும் சீண்டிக்கூட பார்க்க மாட்டார்கள். கிராமத்து மக்கள் சிலர் அந்த கோவக்காய் கொடிகளை அறுத்து வந்து ஆடுகளுக்கு போடுவது உண்டு. அதேபோல பள்ளிக் குழந்தைகள் கோவக்காய் கொடி இலைகளை பறித்து, அடுப்புக் கரியுடன் அரைத்து அதை வகுப்பறையின் கரும்பலகையில் தடவுவார்கள்.
அதே சமயம், கோவக்காயில் மருத்துவ பலன்கள் இருக்கின்றது என விழிப்புணர்வு பெற தொடங்கிய நிலையில், மக்களிடம் அதற்கான தேவை அதிகரித்தது. இந்நிலையில், அதை தோட்டப்பயிராக சாகுபடி செய்ய தொடங்கினர். கோவாக்காயை நீள வாக்கில் அல்லது வட்ட வடிவில் வெட்டி பொரியல் செய்து சாப்பிடுகின்றனர். சிலர் சாம்பாரிலும் சேர்த்துக் கொள்கின்றனர்.
ஊட்டச்சத்து விகிதம் : பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது. மேலும், இதில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளன.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் : ஆயுர்வேதத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவக்காயை பயன்படுத்துகின்றன. இந்தக் கொடியின் தண்டுகள் மற்றும் இலைகளை பறித்து சூப் வைத்து அருந்தலாம். கோவக்காய் இலைகளை பச்சையாக சாப்பிட்டால் குளுக்கோஸ் சகிப்புணர்வு அதிகரிக்குமாம். வாரம் ஓரிரு நாட்கள் இதை உங்கள் உணவில் சேர்த்து வர சர்க்கரை கட்டுக்குள் வரும்.
உடல் பருமனை தடுக்கும் : உடல் பருமனை தடுப்பதற்கான பண்புகள் கோவக்காயில் உள்ளன. உடலில் கொழுப்பு செல்கள் உருவாகுவதை இது தடுக்கிறது. அதேபோல மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலக்கட்டு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
சோர்வை போக்குகிறது : நம் உடல் இயக்கத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் ரத்தச்சோகை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, ஆரோக்கியத்தை தக்க வைக்க கோவக்காய் பெரிதும் உதவுகிறது.
இதர நன்மைகள் : கோவக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. அல்சர் உள்ளவர்களுக்கு இது நல்ல பலன் கொடுக்கும். கால்சியம் மற்றும் இதர மினரல்களால் உருவாகும் சிறுநீரக கற்கள் சிறுநீரக பாதையில் தங்கிவிடும். கோவக்காயில் உள்ள ஆரோக்கியமான கால்சியம் சத்து இந்த சிறுநீரக கற்களை தடுக்கக் கூடியது. கோவக்காய் இலைகள் மற்றும் தண்டுகளை பேஸ்ட் போல அரைத்து சருமத்தில் தடவினால் அலர்ஜிகள் குணமாகும். கோவக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கும். கோவக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
Read More : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பண மழை கொட்டப் போகுது..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மெகா பிளான்..!!