For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு அரசு மனநல சிகிச்சை மையங்கள் இருக்கா?

12:24 PM Apr 19, 2024 IST | Mari Thangam
இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே     தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு அரசு மனநல சிகிச்சை மையங்கள் இருக்கா
Advertisement

தமிழகத்தில் மனநல சிகிச்சை மையங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பது நிறைய பேருக்கு தெரியாது. அந்த விவரங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

Advertisement

பெரும்பாலான உடல் ஆரோக்கியப் பிரச்சினைக்கு மன ஆரோக்கியமே முக்கியக் காரணமாக இருக்கிறது. உடல் நலம் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு மன நலமும் முக்கியம். மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளினால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் உடல் ஆரோக்கியத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. மன நலத்தின் முக்கியத்துவம் தெரிந்த சிலர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் உள்ள மனநல ஆலோசகரிடம் கவுன்சிலிங் பெற்றுக் கொள்கிறார்கள்.

நெறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் இலவச மனநல சிகிச்சை மையம் தமிழ்நாட்டில நிறைய இடங்களில் இருக்கு என்பது தான். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்குள் இதுவும் ஒரு அங்கம். தமிழகத்தில் நிறைய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் மனநலத்திற்கென்று தனிப் பிரிவுகள், சிறப்பு சிகிச்சைகள் உண்டு. அதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

1982 ஆம் ஆண்டு தேசிய மனநல திட்டம் (NMHP) மத்திய அரசால் தொடங்கப்பட்டது. மன ஆரோக்கியம் குறித்த சில நோக்கங்களை அடிப்படையாக வைத்து இந்த திட்டமானது உருவாக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் நேரடியாக மத்திய அரசின் மனநலத் திட்டத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் செயல்பட்டு கீழ்வரும் 18 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

1. எம்.எம்.சி & ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்னை-3 (M.M.C & Rajiv Gandhi Govt.Hospital),
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை-1 (Stanly Medical College & Hospital),
3. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி (Chengalpattu Medical college),
4. கோவை மருத்துவக் கல்லூரி (Coimbatore Medical college),
5. தர்மபுரி மருத்துவக் கல்லூரி (Dharmapuri Medical college),
6. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் (Government Mohan Kumaramangalam medical college),
7. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி (Government villupuram Medical college),
8. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி (Govt. Vellore medical college),
9. கே.ஏ.பி. விஸ்வநாதன் அரசு, திருச்சி (K.A.P. Viswanathan Government),
10. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை (Kilpauk Medical college),
11. கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி (Kanyakumari Medical college),
12. மதுரை மருத்துவக் கல்லூரி (Madurai Medical collge),
13. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (Thoothukudi Medical college Hospital),
14. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி (Tirunelveli Medical college),
15. தேனி மருத்துவக் கல்லூரி (Theni Medical college),
16. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (Thanjavur Medical college Hospital),
17. திருவாரூர் மருத்துவக் கல்லூரி (Tiruvarur Medical college),
18. சிவகங்கை மருத்துவக் கல்லூரி (Sivagangai Medical College),

மேலும், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கடலூர், ராமநாதபுரம், தர்மபுரி, விருதுநகர், சிவகங்கை, கும்பகோணம், கரூர், விழுப்புரம், திருவாரூர், மேட்டூர், நாமக்கல், உசிலம்பட்டி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், அரியலூர், தேனி, நீலகிரி, நாகர்கோவில் என 31 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமையிட மருத்துவ மனைகளிலும் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன.

Tags :
Advertisement