For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தினசரி சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? நிபுணர் சொல்வது என்ன?

09:48 AM Apr 28, 2024 IST | Mari Thangam
தினசரி சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா  நிபுணர் சொல்வது என்ன
Advertisement

பொதுவாக சாக்லேட் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது மற்றும் அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. ஜேசன் விஷ்னெஃப்ஸ்கே என்பவர் சாக்லேட் சாப்பிட்டால் உடலில் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை விளக்குகிறார். 

Advertisement

சாக்லேட்கள், குறிப்பாக டார்க் சாக்லேட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து நமது செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் சாக்லேட் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை உடலில் குறைக்கிறது. இதயத்திற்கு ஆரோக்கியம் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் உங்கள் உடலில் இதய நோய்க்கான அபாயத்தை 37 சதவீதம் குறைக்கிறது.

பக்க வாதம் ஏற்படுவதையும் 29 சதவீதம் குறைக்கின்றது. இருப்பினும், அதன் அதிக கலோரி மற்றும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக குறைவாக சாப்பிடுவது நல்லது. சாக்லேட் இரும்பு, தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும். ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களுக்கு இரும்பு அவசியம், அதே சமயம் தாமிரம் இரும்பு உறிஞ்சுதலை ஆதரிக்கிறது மற்றும் மெக்னீசியம் பல உடல் செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது.

சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும், வீக்கத்தைக் குறைத்து, சரும நீரேற்றத்தை ஊக்குவிக்கும். இருப்பினும், அதிகப்படியான அதிகமான இனிப்பு உங்கள் உடல் எடையை அதிகரிக்க கூடும். சாக்லேட் உற்சாகத்தை தூண்டும் மூளையின் இயற்கை நிலையை மேம்படுத்தும் இரசாயனங்களான எண்டோர்பின்களின் உற்பத்தியை சாக்லேட் தூண்டுகிறது.

உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியின் உணர்வுகளுடன் தொடர்புடைய ஃபைனிலெதிலமைன் என்ற கலவையும் இதில் உள்ளது. சாக்லேட் நினைவாற்றல், கவனம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகின்றது. கூடுதலாக, சாக்லேட்டில் உள்ள காஃபின் மற்றும் புரோமின் அதிக கவனம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தும்.

சாக்லேட்டில் மெக்னீசியம் உள்ளது, இது தசைகளை தளர்த்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது செரோடோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. சாக்லேட் ஒரு சிறந்த ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது மற்றும் காலையில் இதனை எடுத்துக் கொண்டால், நாள் முழுவதும் உற்சாக மனநிலையை தருகிறது.

தசைகளுக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம் டார்க் சாக்லேட் உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சாக்லேட்டில் உள்ள ஃபிளவனால்கள் உடற்பயிற்சியால் ஏற்படும் சோர்வையும் குறைக்கின்றது. அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதால் ஆபத்து இருப்பினும் அதையும் தாண்டி சாக்லேட்டில் அதிகளவில் நன்மைகளும் நிறைந்து காணப்படுகின்றது. இதனை அளவோடு தினசரி சாப்பிடுவது நன்மை பயக்கும்.

Tags :
Advertisement