”சருமம் அழகாகும், புதிய ரத்தம் உற்பத்தியாகும்”..!! வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிச்சிப் பாருங்க..!!
காலையில் எழுந்ததும் பல் துலக்கிய கையுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதனால் உங்கள் உடலுக்காக நீங்கள் காலையில் செய்யும் முதல் நன்மை இதுவாகத்தான் இருக்கும். அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி: காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் நிணநீர் ஆற்றல் பெறுகின்றன. இதனால் நோய் தொற்றுகளை தாக்கும் ஆற்றலை உடல் பெறுகிறது. மேலும், உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
நச்சுகள் வெளியேற்றம்: காலை எழுந்ததும் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீராக இருந்தாலும் அது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றும். நச்சுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகத்திற்கு போதுமான தண்ணீர் காலையிலேயே கிடைத்தால் அதன் வேலையை சிறப்பாக செய்துவிடும்.
செரிமானம்: காலை எழுந்ததும் வயிறு செய்யும் முதல் செரிமானம் தண்ணீராக இருந்தால் அன்றைய நாள் முழுவதும் உங்கள் செரிமானம் சீராக இருக்கும். செரிமானப் பிரச்சனையே வராது.
சருமத்தை அழகாக்கும்: ஒரு கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சருமத்திற்கு தேவையான நீரேற்றம் கிடைப்பதால் மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை நீங்கள் பெறலாம். அழகு கூடும்.
மலச்சிக்கலை தவிர்க்கலாம்: காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்று. தண்ணீர் அருந்துவது இயற்கை உபாதைகளை வெளியேற்ற உதவியாக இருக்கும். அதேபோல் நச்சுகளை வெளியேற்றும் பெருங்குடலுக்கு போதுமான நீர் கிடைத்தால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. இது சீராக இருந்தாலே உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
புதிய ரத்த உற்பத்தி: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், புதிய ரத்த உற்பத்தி மற்றும் சதை வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும், தண்ணீர் குடிப்பது எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் ரத்த அணுக்கள் சுத்திகரிக்கப்படும்.
Read More : பெண்களே உஷார்..!! முகத்தில் வளரும் முடியை ஷேவ் செய்வதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?