கற்றாழையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை.எந்த காலநிலையிலும் எளிதில் வளரக்கூடியது. இதனை வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன.
வாஸ்து மற்றும் ஜோதிஷ்ய பண்டிதர்களின் கூற்றுப்படி, சில செடிகள் வீட்டில் வளர்க்க ஏற்றது.அதிலும் நேர்மறை ஆற்றலைப் பரப்பக்கூடிய தாவரங்களை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது கற்றாழைதான்.
மருத்துவ குணம் கொண்ட கற்றாழை:
கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது பல வகையான பிரச்னைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது.கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தோல் பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கற்றாழை காற்றை சுத்திகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இதனை வீட்டில் வளர்த்தால் மாசுக்களை உறிஞ்சி சுத்தமான சூழலை உருவாக்குகிறது. மேலும் காற்றின் தரம் மேம்படுவதால், சுவாச நோய்களின் ஆபத்து குறைகிறது.
கற்றாழை ஜெல் பல நோய்களுக்கு மருந்தாகவும், சிகிச்சையாகவும் பயன்படுகிறது. கற்றாழை இலைகளை வெட்டி, தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை உண்ணலாம். இதை ஜூஸ் செய்தும் குடிக்கலாம். இந்த ஜெல்லை சருமத்தில தடவினால் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து, வயதான அறிகுறிகளை நீக்குகிறது. தோல் பிரகாசமாக இருக்க உதவுகிறது. மேலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல் முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு வகையான சரும பிரச்னைகளை நீக்குகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை குறையும். இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மனஅழுத்தத்தை போக்கும் கற்றாழை:
கற்றாழை செடி மன அழுத்தத்தை போக்குகிறது. மன அழுத்தத்திலிருந்து விரைவாக மீள உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், ஃப்ரீ ரேடிக்கல்கள், புற ஊதா சேதம் போன்ற எதிர்மறை விளைவுகளை எதிர்த்துப் போராடுகிறது. புற்றுநோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கற்றாழை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன. ஆன்மிக ரீதியாகவும் மனதை தூய்மைப்படுத்தும் சக்தி இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் அவை பாசிட்டிவ் ஆற்றலுடன் அமைதியை ஊக்குவிக்கின்றன. அதனால் எதிர்மறையான விஷயங்களில் மனம் செல்லாது. மேலும் வீக்கத்தைக் குறைத்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. இது வயிற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது.
Read More: