சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா...? சற்றுமுன் அறிவிப்பு
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கே.கே.நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், கிண்டி, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் விடிய விடிய கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.