For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் ரேஷன் கடைகளில் ஏதேனும் குறைகள் இருக்கா..? புகார் தெரிவிக்க வேண்டுமா..? அப்படினா இதை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Monthly Public Distribution Plan People's Grievance Camp for the month of October 2024 will be held on 19th October.
11:13 AM Oct 16, 2024 IST | Chella
உங்கள் ரேஷன் கடைகளில் ஏதேனும் குறைகள் இருக்கா    புகார் தெரிவிக்க வேண்டுமா    அப்படினா இதை மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாதமும், மாநிலம் முழுவதிலும், ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த அக்டோபர் மாதத்துக்கான குறை தீர்ப்பு முகாம் எப்போது என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்து, இந்த கூட்டத்தில் புகாா் தெரிவிக்கலாம். இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அக்டோபர் 2024 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் அக்.19ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகளும் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளீல் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.

புகார்கள் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால், குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”அம்மா உணகங்களில் இலவச உணவு”..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Tags :
Advertisement