முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களே பொதுத்தேர்வுக்கு ரெடியா..? ஹால்டிக்கெட் வந்துருச்சு..!! எப்படி டவுன்லோடு செய்வது..?

07:37 AM Feb 16, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை, வரும் 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20ஆம் தேதி பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, “online portal” என்ற வாசகத்தினை ‘click’ செய்து “HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH – 2024” என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

அத்துடன், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை குறிப்பிட்ட தேதிக்குள் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
தமிழ்நாடுபள்ளி தலைமை ஆசிரியர்கள்பொதுத்தேர்வுமாணவர்கள்ஹால்டிக்கெட்
Advertisement
Next Article