முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடியா..? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

05:36 PM Dec 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை கண்டறிவதற்காக பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களின் கீழ் தாசில்தார்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்லாபாத், பால்குளம், திருக்கோளூர், உடையார்குளம், உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதற்கட்டமாக 6000 ரூபாய் ரொக்கம் மற்றும் 5 கிலோ அரிசி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. பயிர் கடன்கள் குறித்தும் உரிய முடிவினை முதல்வர் அறிவிப்பார்" என்றார்.

Tags :
அமைச்சர் பெரியகருப்பன்கனமழைகூட்டுறவு சங்கம்தூத்துக்குடி மாவட்டம்விவசாய கடன்
Advertisement
Next Article