குழந்தைகள் அதிகமாக அடம் பிடிக்கிறாங்களா? பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன.. ?
குழந்தை வளர்ப்பு என்பதே மிகவும் சவாலான ஒன்றாக மாறிவிட்டது. நம் தாத்தா பாட்டி காலத்தில் ஒரு வீட்டில் 10 - 12 குழந்தைகளை கூட எளிதாக வளர்த்தனர். ஆனால் தற்போது ஓரிரு குழந்தைகளை வளர்ப்பதே சிக்கலான பணியாக மாறிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு பொறுமை என்பதே குறைவாக உள்ளது. மேலும் பிடிவாத குணம் அதிகரித்துள்ளது.
ஆனால் பெற்றோர் செய்யும் சில விஷயங்களே பிள்ளைகளின் பிடிவாத குணத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெற்றோர் செய்யும் சில தவறுகளால் குழந்தைகள் பிடிவாதமான நடத்தையை வெளிப்படுத்தலாம்.
உங்கள் பிள்ளைகள் கேட்டும் எந்த ஒரு விஷயத்தையும் உடனே செய்து விடுகிறீர்கள் அல்லது அவர்கள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுக்கிறீர்கள் என்றால் அது பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறு. இதன் மூலம் அடம்பிடித்தால் எதுவும் கிடைத்துவிடும் என்று உங்கள் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். இது பிடிவாதமான நடத்தையை வளர்க்க வழிவகுக்கும்.
ஒழுக்கம், விதிகள் மற்றும் விளைவுகளை பரிந்துரைப்பதில் நீங்கள் முரண்பட்டால், அது குழந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படும். இதனால் அவர்கள் நீங்கள் சொல்வதை கேட்காமல் இருக்கலாம். உங்கள் எது தவறு அல்லது எது சரி என்று சொல்லிக்கொடுப்பதில் ஒரே மாதிரியான முடிவுகளை எடுக்கவில்லை என்றாலும் அது டிவாதத்திற்கு பங்களிக்கிறது.
பெற்றோர்கள் எதிர்பார்ப்புகளைத் தெளிவாகத் தெரிவிக்கத் தவறினால், அது குழந்தைகள் பிடிவாதமாக மாற வழிவகுக்கும். மேலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் விதிக்கு, விதிகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை விளக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பெற்றோர்கள் இந்த விளக்கத்தை கொடுக்காத போது, அது பிடிவாதமான நடத்தையைத் தூண்டும், இது தவறான புரிதல்களுக்கும் விரக்திக்கும் வழிவகுக்கும்.
உங்கள் பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்யும் போது கோபத்துடன் நடந்துகொள்வதை விட அல்லது எதிர்மறையான தண்டனைகளை கொடுப்பதை தவறு. அதற்கு பதில் அவர்கள் செய்தது ஏன் தவறு என்பதை உங்கள் குழந்தைகளுக்கு பொறுமையாக அமர்ந்து விளக்கம் வேண்டும். அவர்கள் செய்த தவறை புரிந்து கொள்ள அவர்களுக்கு நேரம் கொடுக்கவும். ஆனால் பெற்றோர்கள் இதை செய்யாத போது, குழந்தைகளின் பிடிவாதத்தை அதிகரிக்கலாம்.
உங்கள் பிள்ளைகளின் நல்ல நடத்தையைப் புறக்கணித்து, மோசமான நடத்தையில் கண்டிப்பாக கவனம் செலுத்துவது மிகவும் தவறான அணுகுமுறை. இது குழந்தைகளை மேலும் பிடிவாதமாக ஆக்குகிறது. குழந்தையின் உணர்வுகள் நிராகரிக்கப்படும்போது, அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணரலாம் மற்றும் தங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக பிடிவாதமாக மாறலாம்.