முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆரி பிளவுஸ் அதிக நாட்கள் நீடிக்கணுமா?

Are Ari blouses supposed to last longer?
05:53 AM Jul 17, 2024 IST | Shyamala
Advertisement

ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸை எப்படி அதிக நாள் பாதுகாத்து பயன்படுத்துவது குறித்து தற்போது பார்க்கலாம்.

பண்டிகை அல்லது திருமண விழா என்று எதுவாக இருந்தாலும் தற்போது பெண்கள் மத்தியிலே, ஆரி வேலைப் பாடுகளுடன் செய்யப்பட்ட பிளவுஸ்கள் அதிக டிமான்டாக உள்ளது. இந்த ஆரி வேலைப்பாடுகள் தென்னிந்தியாவில்தான் உருவானது. இதை 'மகம் வேலைப்பாடு' என்றும் கூறுவார்கள்.

Advertisement

ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் சற்று விலை அதிகமாகவே இருக்கும். என்பதால் அதை பேணிக்காப்பது என்பது மிகவும் அவசியமாகும். ஆரி பிளவுஸ்களை அணிவதையே வழக்கமாக வைத்துள்ள பெண்கள் நிச்சயமாக இதனை தெரிந்து'கொள்ளவேண்டும்.

  1. ஆரி பிளவுஸை அயன் செய்வதை தவிர்த்துவிடவும். அயன் செய்வதால் அதில் இருக்கும் வேலைப்பாடுகள் பாதிப்படையலாம். கண்டிப்பாக அயன் செய்ய வேண்டும் என்றால், அடியில் ஒரு தலையணை வைத்து அயன் செய்யவும்.
  2. ஆரி பிளவுஸை கண்டிப்பாக சாதாரணமாக பீரோவில் வைக்காமல் அதை ஒரு காட்டன் பேக்கில் வைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதுபோல, பிளவுஸை மடிக்கும்போது வேலைப்பாடுகள் இருக்கும் பக்கத்தை உள்பக்கமாக வைத்து மடித்து வைப்பது சிறப்பாகும்.
  3. ஆரி பிளவுஸை துவைக்காமல் நிழலிலே இரண்டு நாட்கள் போட்டு உலர்த்துவதே சிறந்ததாகும் . கண்டிப்பாக துவைக்க வேண்டும் என்றால், ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். வாஷிங் மிஷினில் போடுவதை தவிர்ப்பது நல்லது.
  4. ஆரி பிளவுஸை அணியும்போது Sweat pads அணிய வேண்டும். Sweat pads ஐ பயன்படுத்தும்போது, நம் உடலில் இருக்கும் வியர்வையை அது உறிஞ்சி விடுவதால் பிளவுஸில் உள்ள பீட்ஸ் போன்றவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த முறைகளை பயன்படுத்தினால் ஆரி பிளவுஷை அதிக நாட்கள் பாதுகாத்து பயன்படுத்த முடியும்.

read more.. ஷாருக்கான் படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன்..!! – ரசிகர்கள் உற்சாகம்

Tags :
Aari work blouseAari work blouse design
Advertisement
Next Article