இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மற்றொரு முகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்...
திரைப்படத்தில் வாய்ப்பு வரும்போது எல்லாம், மதவெறியை அப்பட்டமாகவே காட்டி சென்று இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அமைதியான குணம் உடையவர். பொதுவாகவே தமிழ் சமூகத்தின் மனதை பிரதிபலிப்பவர் என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அவருக்குள் மதவெறி இருக்கும் விஷயம் பலருக்கு தெரியாது.
இஸ்லாம் சமூகத்தினை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்ற மதத்தின் கடவுளை குறிப்பிடுவதை கூட தவிர்த்து வந்துள்ளார் என்பது அவருடைய இசையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தான் இசையமைக்கும் திரைப்படத்திற்கு வாய்ப்பு வரும்போது எல்லாம் மதவெறியை அப்பட்டமாகவே காட்டி சென்று இருக்கிறார். அவர் இசையமைப்பில் வெளிவந்த ஜோதா அக்பர் பாடல்கள், ஃபனா படத்தில் இருக்கும் சந்த் சிஃபரிஷ், லால் சலாம் படத்தில் ஜலாலி பாடல்களை யோசிக்காமல் பாடி இருக்கிறார்.
அதேவேளையில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அய்யப்பன் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை. பிரவீன் மணி என்பவரே இசையமைத்தார். அதேபோல், பாபா படத்தில் வந்த காளிகாம்பாள் பெயர் வரும் உன் நடை கண்டு பாடலில் சாமி பெயரை உச்சரிக்கவே மாட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நியூ படத்தில் காலையில் தினமும் கண் விழித்தால் பாடலில் தெய்வம் என்ற வார்த்தையை தேவதையாக மாற்றியதாக வாலி ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். விஷ்ணுவுக்கான இரண்டு பாடலை இசையமைக்க வேண்டும் என்பதற்காகவே தசாவதாரம் படத்தினை இசையமைக்கவே முடியாது என மறுத்துவிட்டார்.
இவரை ஒப்பிடும் போது, இசைஞானி இளையராஜா எந்த மதத்திற்கும் எந்த கடவுள் பெயரையும், நாத்திகப் பாடல்களையும் கூட இசையமைப்பதையோ பாடுவதையோ எதிர்த்ததில்லை. ஏனெனில், அவர் தொழிலை தொழிலாக பார்க்கிறார். ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானோ, மதவெறியை அப்பட்டமாக காட்டி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.