திருமண ஆவணப்பட விவகாரம்.. நயன்தாரா மீது வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி..!!
இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார். இதனால் பல்வேறு கட்டுபாடுகளுடன் இத்திருமணம் நடந்தது.
இத்திருமணம் ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் நீண்ட காலமாக உருவாகி வந்தது. இதில் நயன்தாராவின் திருமணம் அல்லாது அவரது வாழ்க்கை பயணத்தையும் விவரிப்பதாகவும் இருக்கும் என நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையொட்டி படத்தின் ப்ரொமோவை தொடர்ச்சியாக அடுத்தடுத்து சமீபத்தில் வெளியிட்டு வந்தனர். அதில் ஒரு ப்ரொமோவில் நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் மூன்று விநாடி இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் பாடலையும், காட்சியையும் தன்னிடம் அனுமதி கேட்காமல் வீடியோவில் பயன்படுத்தியதாகக் கூறி 3 விநாடிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதனைத்தொடர்ந்து நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசு பொருளானது..
இந்தநிலையில் தான் தற்போது நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர தனுஷுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நயன்தாராவுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
Read more ; அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!! திடீரென தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!!